பேட்டிங் செய்யாமலே இங்கிலாந்துக்கு 5 ரன்.. இலவசமாக கொடுத்த அஸ்வின்.. களத்தில் என்ன நடந்தது?

0
906
Ashwin

குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்று ஐந்து விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 326 ரன்கள் சேர்த்து இருந்தது. ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்கள்.

- Advertisement -

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை இருவரும் துவங்குவதற்கு வந்தார்கள். ஆண்டர்சன் பந்துவீச்சில் யாதவ் 5 ரன்களில் வெளியேறினார். இதற்கடுத்து மேற்கொண்டு இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ரவீந்தர ஜடேஜா 112 ரன்கள் உடன், ஜோ ரூட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்திய அணி 331 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் இழந்து இருந்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருப்பதால், குறைந்தபட்சம் 450 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயம் இந்திய இருக்கிறது.

இப்படியான நிலையில் அறிமுக வீரர் துருவ் ஜுரல் உடன் இணைந்து அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இன்றைய நாளில் முதல் செஷனில் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டது.

- Advertisement -

மேலும் இருவரும் இணைந்து 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். துருவ் ஜூரல் 71 பந்துகளில் 31 ரன்கள், ரவிச்சந்திரன் அஸ்வின் 64 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து தற்போது களத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 388 ரன்கள் சேர்த்து இருக்கிறது.

இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த செயலால் ஐந்து ரன்கள் பெனால்டியாக இந்திய அணிக்கு கொடுக்கப்பட்டு, அந்த ஐந்து ரன்கள் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யாமலே அவர்களது கணக்கில் ஏற்றப்பட்டு இருக்கிறது. அவர்கள் பேட்டிங் செய்ய வரும் பொழுது, எடுத்ததும் அவர்களுடைய ஸ்கோர் போர்டில் ஐந்து ரன்கள் வந்துவிடும்.

அஸ்வின் என்ன செய்தார் என்றால், ஆடுகளத்தில் ஸ்டெம்புக்கு நேராக இருக்கும் பகுதியில் ஓடி வரக்கூடாது. இந்த பகுதிகள் சேதமடைந்தால் பேட்டிங் செய்வதற்கு கடினமாக ஆடுகளம் மாறிவிடும். எனவே பேட்ஸ்மேன்கள் பந்து விளையாடிவிட்டு, ஆடுகளத்தை விட்டுத் தள்ளி ஓரத்தில்தான் ஓட வேண்டும். ஆனால் அஸ்வின் அப்படி செய்யாமல் நேராக ஓடி வந்து விட்டார்.

இதையும் படிங்க : ஜெய் ஷா போட்ட உத்தரவு.. மீண்டும் மீறும் இஷான் கிஷான்.. என்ன நடந்து கொண்டிருக்கிறது?

இதை ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட் அம்பயரிடம் புகார் செய்ய, அதை ஏற்கனவே பார்த்திருந்த அம்பயர் ஐந்து ரன்கள் பெனால்டியாக கொடுத்துவிட்டார். நேற்று ரவீந்திர ஜடேஜா இப்படி செய்த பொழுது வார்னிங் கொடுக்கப்பட்டது. தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த பொழுது பெனால்டி கொடுக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.