“அஷ்வின எடுக்காதிங்க.. கொண்டு வந்தா அடி வாங்குவிங்க.. இதான் காரணம்!” – சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு ஓபன் வார்னிங்!

0
1319
Gavaskar

இன்று இந்திய அணி தரம்சாலா மைதானத்தில் நியூசிலாந்து அணி சந்திக்கிறது. இந்த இரண்டு அணிகளும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி தோல்வி அடையாமல் இருக்கின்றன.

எனவே இன்று இரண்டில் ஏதாவது ஒரு அணி முதல் தோல்வியை இந்த உலகக் கோப்பை தொடரில் சந்தித்தாக வேண்டும். இந்த காரணத்தினால் இந்த போட்டி மிகவும் சுவாரசியமான ஒன்றாக மாறியிருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்திய அணியில் மாற்று வீரரே இல்லாத வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்திருக்கின்ற காரணத்தினால், நியூசிலாந்துக்கு எதிராக எப்படிப்பட்ட அணியை உருவாக்குவது என்கின்ற பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

இந்தப் போட்டியில் வென்றால் ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பு என்பது உறுதியாகி விட்டதாகவே எடுத்துக் கொள்ளலாம். வென்றால் ஐந்து வெற்றிகள் உடன் வெளியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுடன் இந்தியா விளையாட இருக்கிறது. எனவே அரையிறுதிக்கான ஆறு வெற்றி என்பது மிக எளிதாக கிடைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “நான் இந்திய அணி நிர்வாகத்தில் ஒரு அங்கமாக இருந்தால் இஷான் கிஷான் இல்லை சூரியகுமார் யாதவ் இருவரில் ஒருவரை ஹர்திக் பாண்டியா இடத்திற்கு எடுப்பேன். நமக்கு ஒரு பேட்டர் தேவை. நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் சிக்கல் என்னவென்றால், அவர்களின் உயர்தரமான வேகப்பந்துவீச்சுக்கு முன்னால் நாம் சீக்கிரம் முதல் மூன்று விக்கெட்டுகளை கொடுத்து விடுவோம். எனவே பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டும்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா இடத்தில் அஸ்வின் வந்தால் அது உங்கள் பேட்டிங் யூனிட் பலத்தை சிறிதாக குறைக்கும். எனவே இடது கை இசான் கிஷான் இல்லை சூரியகுமார் யாதவ் பேட்டிங் யூனிட்டில் ஆறாவது இடத்தில் இருந்தாக வேண்டியது அவசியம்.

மேலும் சர்துல் தாக்கூர் இடத்தில் முகமது சமியை கொண்டு வருவது மிக நல்ல யோசனை. அவரைக் கொண்டு வரும் பொழுது ஐந்து முழுமையான பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பார்கள். மேலும் ஹர்திக் பாண்டியா இடத்தில் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் வரும்பொழுது பலம் ஆகிவிடும்.

எனவே அடிப்படையில் இரண்டு மாற்றங்களை செய்ய வேண்டும். இஷான் கிஷான் இல்லை சூரியகுமார் யாதவ் வருவது பேட்டிங்கை பலப்படுத்தும். முகமது சமி வருவது பந்துவீச்சை பலப்படுத்தும். எனவே வேறு யாரும் தேவையில்லை!” என்று கூறி இருக்கிறார்!