இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி இரண்டு புதிய சாதனைகளை படைத்து இந்திய அணியை போட்டியில் முன்னிலையில் கொண்டு வந்து வைத்திருக்கிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் ஜெய்ஸ்வால் 56 மற்றும் ரிஷப் பண்ட் 39 ரன்கள் எடுக்க, மற்ற நான்கு இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ஏமாற்றம் தந்தார்கள். இதன் காரணமாக இந்திய அணி 144 ரன்களில் முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்து விட்டது.
அனாயசமாக அடித்த அஸ்வின் – ஜடேஜா
இந்திய அணிக்கு பேட்டிங் ஜோடியாக இருந்த போதிலும் கூட அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் அந்த நெருக்கடி தங்களுடைய பேட்டிங்கில் காட்டிக் கொள்ளவே இல்லை. இருவரும் ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவது போல அதிரடியாகவே விளையாடினார்கள். குறிப்பாக அஸ்வின் பங்களாதேஷ் பந்துவீச்சை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் நொறுக்கினார்.
இந்த ஜோடியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்றைய நாள் முடிவில் 102 ரன், ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி ஏழாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது.
அஸ்வின் – ஜடேஜா உடைத்த இரண்டு ரெக்கார்டுகள்
2000ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணி தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டியில் ஏழாவது விக்கெட்டுக்கு சவுரவ் கங்குலி மற்றும் சுனில் ஜோசி இருவரும் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்கள். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ஏழாவது விக்கெட் பார்ட்னர் சிறப்பாக இருந்தது. இதை தற்பொழுது அஸ்வின் ஜடேஜா ஜோடி உடைத்திருக்கிறது.
இதையும் படிங்க : 306 ரன்.. 10 பவுண்டரி 3 சிக்ஸ் சஞ்சு சாம்சன் கலக்கல்.. ஸ்ரேயாஸ் மீண்டும் டக்.. இந்தியா டி அணி முன்னிலை.. துலீப் டிராபி 2024
மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2016ஆம் ஆண்டு ஜடேஜா மற்றும் கருண் நாயர் இருவரும் சேர்ந்து ஏழாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்கள். இதுவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழாவது விக்கெட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன் ஆக இருந்தது. இதையும் அஸ்வின் ஜடேஜா ஜோடி உடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!