ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்த அக்சர்- அஸ்வின் ஜோடி !

0
2396

ஆஸ்திரேலியா அணியின் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது .

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 263 ரண்களுக்கு ஆள் அவுட் ஆனது . அதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது .

- Advertisement -

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. 46 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா 66 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது . விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர் . ஆனால் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவும் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி அடுத்தடுத்து ஆட்டம் ஆட்டம் இழந்ததால் அழுத்தமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது . இதனைத் தொடர்ந்து ஸ்ரீகர் பரத் நான்கு ரண்களில் ஆட்டம் இழந்தார் . இதனால் இந்திய அணி 139 ரன்களுக்கு 7 விக்கெட் களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது .

அப்போதே எட்டாவது விக்கெட் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் ஆல் ரவுண்டர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தங்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர் . அதிரடியுடனும் தற்காப்பு ஆட்டத்தையும் வெளிப்படுத்திய இவர்கள் ஆஸ்திரேலியா அணி விக்கெட் எடுக்காதவாறு சிறப்பாக ஆடினர் . குறிப்பாக அதிரடியாக ஆடிய அக்சர் பட்டேல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்தார் . அவருக்கு பக்கபலமாக நின்று ஆடிய அஸ்வின் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் . எட்டாவது விக்கெட்க்கு அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இணைந்து 114 ரன்கள் சேர்த்தனர் .

இதன் மூலம் எட்டாவது விக்கெட்டிற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 100 ரண்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் அக்சர் பட்டேல் மற்றும் அஸ்வின் ஆகியோர் இணைந்துள்ளனர் . இந்தப் பட்டியலில் செய்யது கிர்மானி மற்றும் கர்சான் கார்வி ஜோடி முதலிடத்தில் உள்ளது . சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஹர்பஜன் சிங் ஜோடி இரண்டாவது இடத்திலும் அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஜோடி மூன்றாவது இடத்திலும் எம் எஸ் தோனி மற்றும் புவனேஸ்வர் குமார் ஜோடி நான்காவது இடத்திலும் உள்ளன . இன்றைய போட்டியில் 114 ரன்கள் எட்டாவது விக்கெட்டிற்கு எடுத்ததன் மூலம் அக்சர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி ஐந்தாவது இடத்தில் இடம் பெற்று இருக்கிறது .

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து 74 ரன்களில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அக்சர் பட்டேலும் ஆட்டம் இழந்தார். கடைசி விக்கெட்டாக முகமது சமி ஆட்டம் இழந்ததை தொடர்ந்து இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 1 ரன் முன்னிலை பெற்றுள்ளது .