பும்ரா பாய் என் கிளப்புக்கு வரட்டும் வெல்கம்.. என் பவுலிங் திட்டம் இதுதான்.. உற்சாகம் ஆகக்கூடாது – அர்ஷ்தீப் சிங் பேச்சு

0
80
Arshdeep

நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இரண்டு விக்கெட் கைப்பற்றியதின் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை பூம்ரா கைப்பற்றினார். இதுகுறித்து சக பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 175 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து பந்துவீச்சில் இந்திய அணிக்கு பவர் பிளேவில் அர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தார். இதைத்தொடர்ந்து மற்ற பவுலர்களும் சிறப்பாக செயல்பட தென் ஆப்பிரிக்கா 74 ரன்னில் சுருண்டது. இதை எடுத்து இந்திய அணி 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

என்னுடைய திட்டம் இதுதான்

இந்த போட்டி குறித்து பேசி உள்ள அர்ஸ்தீப் சிங் கூறும்பொழுது “ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு எவ்வளவு உதவி இருக்கிறதோ அதை முழுமையாக பயன்படுத்தி அணிக்கு ஆரம்பத்தில் விக்கெட்டுகள் எடுத்து தர வேண்டும். பந்தின் தையலை ஆடுகளத்தில் கடுமையாக அடிக்கும் பொழுது ஏதாவது உதவி இருப்பது போல தோன்றியது. ஒன்று பந்து பவுன்ஸ் ஆகிறது அல்லது உள்ளே வெளியே என செல்கிறது. எனவே பந்தின் தையலை ஆடுகளத்தில் கடினமாக அடித்து பந்து வீசுவதே எனது திட்டமாக இருந்தது”

“நான் இன்று முழு வீச்சில் பந்துவீசினேன். முதலில் ஒரு விக்கெட் எடுத்தேன் அதற்குப் பிறகு நான் ஒரு பவுண்டரிக்கு அடிக்க பட்டேன். திரும்பி அடுத்த ஓவரில் வந்து மீண்டும் ஒரு பவுண்டரிக்கு அடிக்க பட்டேன். அப்பொழுது பந்தை கொஞ்சம் ஷார்ட்டாக வீச வேண்டும் என்று எனக்கு தெரியும். உடனே நான் அதைச் செய்தேன் எனக்கு இன்னொரு விக்கெட் கிடைத்தது”

- Advertisement -

பும்ரா பாய்க்கு வெல்கம்

“பும்ரா பாய் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். நான் ஏற்கனவே 100 விக்கெட்டுகள் எடுத்து விட்டதால் இந்த கிளப்புக்கு அவரை வரவேற்க வெல்கம் பாய் என்று கூறினேன். நாங்கள் இருவரும் இருப்பதால் கேப்டனுக்கு வேலைகள் எளிதாகிறது. தேவைப்பட்டால் பவர் பிளேவில் எங்களில் யாரையும் மூன்று ஓவர்கள் வீச வைக்க முடியும். மேலும் பவுலிங் காம்பினேஷனை விரும்பும்படி அமைக்கலாம்”

இதையும் படிங்க : மற்ற அணிகளை விட இந்தியா இந்த விஷயத்தில் டாப்.. இவங்க 2 பேர் போதும் ஆட்டத்தையே முடிப்பாங்க – ஆகாஷ் சோப்ரா

“நாங்கள் முடிந்தவரை அணிக்கு நெகிழ்வுத் தன்மையை கொடுக்க முயற்சி செய்கிறோம். நானும் அவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கிறோம். மேலும் நான் நிகழ்காலத்தில் இருக்கவும் வேடிக்கையாக இருக்கவும் விரும்புகிறேன். சீம் மற்றும் ஸ்விங் இருக்கும் ஆடுகளங்களில் நீங்கள் விளையாடுவது அரிது. எனவே நான் பொறுமையாக இருக்க முயற்சி செய்கிறேன் ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு உதவி இருந்தால், நீங்கள் அதிக உற்சாகமடைந்து விடக்கூடாது. அந்த நேரத்தில் ஒழுங்காக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -