இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் அடுத்த டி20 உலகக்கோப்பைக்குள் இந்திய அணி இதனை செய்து நம்மை ஆச்சரியப்படுத்தலாம் என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி ஏறக்குறைய தங்களது இறுதி டி20 11 தேர்வு செய்து விட்டது என்றே கூறலாம். இருப்பினும் அவ்வப்போது விளையாடும் போட்டிகளில் இந்திய அணி சில சில மாற்றங்களை செய்து வருகிறது. கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய தேர்வுக் குழு ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தியது.
இருப்பினும் சகால் விளையாட வில்லை. சூப்பர் 8 சுற்றில் இருந்து குல்தீப் யாதவ் அனைத்து போட்டிகளில் விளையாடினார். இந்த சூழ்நிலையில் அடுத்த உலகக் கோப்பை தொடருக்கு வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து விளையாடி வரும் நிலையில் இந்திய அணி இதிலும் மாற்றம் செய்து வருண் அல்லது குல்தீப் இருவரில் யாராவது ஒருவரை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தும் என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது இந்திய அணி நிர்வாகம் ஏற்கனவே பலமுறை நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளது. எனவே உலகக்கோப்பைக்குள் நாம் நுழையும் தருணத்தில் வருண் சக்கரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ் என இருவரில் யாராவது ஒருவரை தேர்வு செய்து நம்மை ஆச்சரியப்படுத்தும்.
இதையும் படிங்க:சூர்யா அவரோட பலத்துக்கு விளையாடாம.. நான் சொல்றத செஞ்சா ரன்கள் தானா வரும்.. அதுதான் பெரிய பலம் – இர்பான் பதான் பேட்டி
டி20 வடிவத்தை பொருத்தவரை நீங்கள் டாப் அன் டெயிலை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் ரன்கள் கசியும் இடம் என்றால் அவை தான். ஒன்று ஆட்டத்தை உருவாக்க முடியும் அல்லது உடைக்க முடியும் அந்த இடத்தில் தான் இந்திய அணியில் பும்ரா மற்றும் அர்ஸ்திப் இருவரும் சக்தி வாய்ந்த பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள். மற்ற அணிகளை காட்டிலும் இந்திய அணி இந்த இடத்தில் தான் சிறந்து விளங்குகிறது” என்று அவர் பேசியிருக்கிறார்.






