சச்சினுக்கு வந்த சோதனை.. தொடர்ந்து சொதப்பும் அர்ஜுன் டெண்டுல்கர்.. ரஞ்சி டிராபி 2024!

0
217

இந்திய கிரிக்கெட் அணியின் அடிநாதமே ரஞ்சிக் கோப்பை தான். இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தான் இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என்ற நிலை இன்னும் நீடிக்கிறது. இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் தந்தை போலவே கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வேண்டும் என பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.

சச்சின் மகன் என்பதால் பெரிய பெரிய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்யும் வாய்ப்பு எல்லாம் இவருக்கு கிடைத்தது. தன் மகனை பெரிய லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தந்தையும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது ரஞ்சி அணியிலும் விளையாடி வருகிறார். மும்பை கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பது கடினம் என்பதால் அவர் கோவா அணிக்கு சென்று விளையாட தொடங்கி விட்டார். 24 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை ரஞ்சிக்கோப்பையில் 9 இன்னிங்ஸ் விளையாடுகிறார்.

இந்த நிலையில் நடப்பாண்டில் கோவா அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் திரிபுரா அணியுடன் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணியில் கேப்டன் விரித்மான் சாகா 97 ரன்கள் அடிக்க முதல் இன்னிங்சில் 484 ரன்கள் எடுத்தது. இதில் கோவா அணியின் பந்துவீச்சாளர் மோஹித் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

கோவா அணியில் இடம்பெற்று பந்து வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 26 ஓவர்கள் வீசி 94 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் மட்டுமே எடுத்தார். இதை அடுத்து கோவா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அப்போது பேட்டிங் செய்ய வந்த அர்ஜுன் டெண்டுல்கர் 21 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் கோவா அணி 135 ரன்கள் மட்டும் தான் எடுத்திருக்கிறது. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திரிபுரா போன்ற அணியை எதிர்கொள்ளும் போது குறைந்தபட்சம் ஒரு அரை சதம் அடித்து இருந்தாலும் ரசிகர்கள் கண்டுக் கொள்ளாமல் இருப்பார்கள். இனிவரும் போட்டியிலாவது அர்ஜுன் டெண்டுல்கர் ரன் மற்றும் விக்கெட் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -