“நீங்கதான் பெரிய அதிரடியா? ஜெய்ஸ்வால எப்படி அப்படி சொல்லலாம்?” – டக்கெட்டுக்கு மைக்கேல் வாகன் கேள்வி

0
1083
Jaiswal

இங்கிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்திருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி சதத்தை தவறவிட்ட அவர், அதற்கு அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இரண்டு இரட்டை சதங்களை அடித்து பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

முதலாவது இரட்டை சதம் அடிக்கும் பொழுது மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சுக்கு மரியாதை கொடுத்து விளையாடிய ஜெய்ஸ்வால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அப்படியே திரும்பி ஜேம்ஸ் ஆண்டர்சனை நொறுக்கி தள்ளிவிட்டார்.

இதேபோல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 50 பந்துகளில் வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்தவர் அதற்கு அடுத்து 122 பந்தில் சதத்தை பூர்த்தி செய்து விட்டார்.

மேலும் சதத்தை அடித்து கொஞ்சம் பொறுமை காட்டியவர், அதற்கு அடுத்து இரட்டை சதத்தை மின்னல் வேகத்தில் போய் எட்டி விட்டார். இரட்டை சதம் அடித்த அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு பெரிய வேதனையை உண்டாக்கினார்.

- Advertisement -

இப்படி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடும் பொழுது, தங்களிடம் விளையாடும் எதிரணி வீரர்கள் அதிரடியாக விளையாடுவதற்கு தாங்கள்தான் காரணம் என்றும், அதற்கான கிரெடிட் தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும், இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் கூறியிருந்தார்.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ” இங்கிலாந்து அணிகள் சொல்வதை நீங்களே கேளுங்கள். ஜிம்மி ஆண்டர்சன் தங்கள் அணி 600 ரன்கள் துரத்தக்கூடியது என்று சொல்லி இருந்தார். ஆனால் அவர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் துரத்தவில்லை. மூன்றாவது போட்டியில் 500 ரண்களை துரத்தவில்லை. மேலும் 122 ரன்னில் ஆல் அவுட் ஆனார்கள்.

இதையும் படிங்க : அஷ்வினுக்காக ஜெய் ஷா செய்த காரியம்.. உண்மையை உடைத்து சொல்லிய ரவி சாஸ்திரி

அதே சமயத்தில் பென் டக்கேட் ஜெயஸ்வால் விளையாடும் விதத்திற்கான பெருமை தங்களுக்கே சேர வேண்டும் என்று கருத்தை முன்வைக்கிறார். ஏன் இதுவரை யாருமே அதிரடியாக விளையாடியது இல்லையா? இதுவரை யாருமே அட்டாக்கிங் பேட்டிங் செய்தது கிடையாதா?” என்று அவருடைய பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.