“பாபர் அசாம் நல்லா விளையாடினா மட்டும் நீங்க ஜெயிச்சிடுவிங்களா?.. உண்மைய பேசுங்கப்பா!” – இந்திய முன்னாள் வீரர் அதிரடியான கருத்து!

0
196
Babar

பாகிஸ்தான அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வென்று மிகவும் நம்பிக்கையுடன் ஆரம்பித்தது.

ஆனால் அதற்கு அடுத்து பெரிய அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சந்தித்த பொழுது, இந்த அணிகளின் திறமைக்கு பாகிஸ்தான் அணியால் ஈடு கொடுக்க முடியவில்லை.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளிடமும் தோல்வி அடைந்தது. ஆனால் இதுவரையில் பாகிஸ்தான் உள் தரப்பிலிருந்து பாகிஸ்தான் அணியின் மீது பெரிதான விமர்சனங்கள் எதுவும் எழவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தானை சென்னையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், தேவையான ரன்களை எடுத்தும் கூட, பந்துவீச்சு மற்றும் கேப்டன்சி முடிவுகள் தவறாக இருந்த காரணத்தினால் தோல்வியடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விதான் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டு வந்திருக்கிறது. அரசியல் காரணங்களால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போட்டிகளுக்கு சமீப காலத்தில் நிறைய முக்கியத்துவம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரின் பாதையில் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாமை நீக்க முடியாது என்கின்ற காரணத்தினால் மட்டுமே அவர் கேப்டனாக இருக்கிறார் என்று பாகிஸ்தான் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் பாபர் அசாம் பேட்டிங் செயல்பாடும் மிக சுமாராக இருந்திருக்கிறது. அவர் 157 ரன்களை 34 சராசரியில் 79 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். இது மிகவும் சுமாரான செயல்பாடுதான்.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆடுகளம் நன்றாக இருந்து, அவர்கள் முதலில் பேட்டிங் செய்து வழக்கம் போல் ரன்கள் குவிக்க ஆரம்பித்தால், பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் மோசமானதாகிவிடும்.

மேலும் பாகிஸ்தான் அணிக்குள் சூழல்கள் சரியாக இல்லை. மேலும் அங்கிருந்து அணி மீது என்ன மாதிரியான கருத்து இருக்கிறது என்பது குறித்து தெளிவான அறிக்கைகள் முன்வைக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணியினரை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன நினைக்கிறது என்று தெளிவுபடுத்த வேண்டும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பில் இருந்து வெளிவந்த சில அறிக்கைகளின் மூலமாக பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அவரது கேப்டன்சியும் அவரது பேட்டிங் பார்மும் மிகச் சாதாரணமாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக செயல்படாத காரணத்தினால் மட்டுமே இந்த தோல்விகள் வந்து விடவில்லை. இதற்கு வேறு பல காரணங்களும் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!