“நீங்க கோலி ராகுல குறை சொல்றீங்களா?.. என்ன நடந்திருக்கும் தெரியுமா?” – இந்திய முன்னாள் வீரர் காட்டமான விளக்கம்!

0
8538
Virat

ஆஸ்திரேலியா அணி நேற்று ஆறாவது முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றி மிகப்பெரிய சாதனையை செய்தது.

இந்த உலகக் கோப்பை தொடரில் 10 ஆட்டங்களில் தோற்காமல் வந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கனவை இழந்தது.

- Advertisement -

நேற்றைய போட்டி இந்திய அணிக்கு மிகவும் மோசமான ஒன்றாக இருந்தது. பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. பந்து வீசும் பொழுது பந்து வீச கடினமாக இருந்தது. எனவே இதன் காரணமாக நடுவில் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் மிக பொறுமையாக விளையாட வேண்டியது இருந்தது.

இந்த ஆட்டம் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “எந்தத் தவறும் செய்யாமல் ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இந்திய அணி சிக்கிக் கொண்டது. இதனால்தான் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் பௌண்டரி சிக்ஸர்கள் பற்றி நினைக்கவில்லை. அவர்கள் ஒரு பெரிய ஷாட் ஆடி ஆட்டம் இழந்து இருந்தால், இந்திய அணி முழுமையாக 50 ஓவர்கள் விளையாடியிருக்காது. வெளிப்படையாகவே அவர்கள் கைகள் கட்டப்பட்டிருந்தது.

அவர்கள் ஒன்று இரண்டு ரன்கள் எடுத்து முன்னேற முயற்சி செய்தனர். ஆனால் நடுவில் 50 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆட்டம் இழந்தார். அவர் இப்படியான ரன்களில் ஆட்டம் இழக்கவே மாட்டார். ஆனால் அவரும் ஒரு மனிதர்தானே. நீண்ட நேரம் விளையாட வேண்டிய தேவை இருந்ததால் ஜடேஜாவை முன்னே அனுப்ப வேண்டி இருந்தது.

- Advertisement -

ஆனால் அப்படி அனுப்பப்பட்ட ஜடேஜாவும் ஆட்டம் இழந்தார். பந்தும் ஆடுகளமும் வறண்டு காணப்பட்டதால், கடைசியில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. இதனால் கே எல் ராகுல் ஆட்டம் இழந்தார். சூரியகுமார் யாதவுக்கு ரிதம் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு அவர் விளையாட முயற்சி செய்தார். ஆனால் இப்படியான ஆடுகளத்தில் தப்பி பிழைப்பது கடினம்.

ஆஸ்திரேலியா அழகாக விளையாடியது. அருமையான உத்தியை வைத்திருந்தது. அவர்கள் மூன்று ஸ்டெம்ப்பை குறிவைத்து வீசினார்கள். மேலும் கொஞ்சம் ஷார்ட் ஆக வீசினார்கள். ஏனென்றால் அவர்கள் மூவரும் உயரமான பந்துவீச்சாளர்கள். இதனால் கவர் திசையை திறந்துவிட்டு, லெக் சைடு 5 பீல்டர்கள் வைத்தார்கள்.

- Advertisement -

பந்தும் ஆடுகளமும் வறண்டு இருந்த காரணத்தினால். ஆடுகளத்தில் நன்றாகப் பந்து கிரிப் ஆனது. இதன் காரணமாக அவர்கள் கட்டர்கள் வீசுவது என்று முடிவு செய்தார்கள். அவர்களிடம் தெளிவான திட்டம் இருந்தது. அவர்கள் அதை கடைசி வரை பின்பற்றி வென்றார்கள் என்று கூறி இருக்கிறார்!