எனக்கு மூணு பேர் இருக்காங்க.. கேப்டன் பதவி பத்தி எந்த கவலையும் கிடையாது – சிஎஸ்கே ருதுராஜ் பேட்டி

0
4036
Ruturaj

நாளை 17வது ஐபிஎல் சீசன் துவக்க போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி டாஸ் நிகழ்வுக்கு வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அவர் அதிரடியாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

இதற்கு அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்திய அணிக்காகவும் மகாராஷ்டிரா மாநில அணிக்காகவும் விளையாடும் 27 வயதான தங்கள் அணியின் துவக்க ஆட்டக்காரர் ருத்ராஜை கேப்டனாக கொண்டு வந்திருக்கிறது. பலரும் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு அவரே கேப்டனாக இருப்பார் என்று கூறிவந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் அப்படியே நினைத்து இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளம்மிங் இது முழுக்க முழுக்க மகேந்திர சிங் தோனியின் தனிப்பட்ட முடிவு என்று கூறியிருக்கிறார். மேலும் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் முழுவதும் விளையாடுவார் என்று நம்புவதாகவும் அவர் உடல் தகுதி சிறப்பாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

2019 முதல் 2024 வரை ருதுராஜ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2019 ஆம் ஆண்டு 20 லட்சம் ரூபாய்க்கு ருதுராஜ் வாங்கப்பட்டார். அவருக்கு அந்த ஆண்டு விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 2020 ஆம் ஆண்டு முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடி தொடர்ந்து மூன்று அரை சதங்களுடன் துவக்க ஆட்டக்காரராக 204 ரன்கள் எடுத்திருந்தார்.

எனவே அடுத்த வருடம் 2021 ஆம் ஆண்டு அவர் சிஎஸ்கே அணியின் முழு நேர துவக்க ஆட்டக்காரராக விளையாடி, 16 போட்டிகளில் ஒரு சதத்துடன் 635 ரன்கள் குவித்தார். அவரே அந்த ஆண்டு ஆரஞ்சு தொப்பியையும் வெல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் ஆனது. மீண்டும் 2022 ஆம் ஆண்டு ஐ பி எல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மோசமாக அமைய, கடந்த 2023 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் என்ற ஐபிஎல் தொடரில், மொத்தம் 16 போட்டிகளில் 590 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதையடுத்து கேப்டன் பொறுப்பு தேடி வந்திருக்கும் நிலையில் இது குறித்து ருதுராஜ் பேசும் பொழுது “அணியில் மூத்த வீரர்களான மஹி பாய், ஜட்டு பாய் மற்றும் ரகானே பாய் ஆகியோர் என்னை வழிநடத்த இருக்கிறார்கள். அதனால் கேப்டன் பொறுப்பு குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. தான் இதை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இதையும் படிங்க : தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்.. ரோகித் சர்மா வெளியிட்ட பதிவு.. ரசிகர்கள் நெகழ்ச்சி

மேலும் இதை நன்றாக உணர்கிறேன். இது எனக்கு ஒரு பாக்கியம். அதைவிட இது பெரிய பொறுப்பு. ஆனால் எங்களிடம் இருக்கும் சிறந்த குழுவின் காரணமாக நான் உற்சாகமாக இருக்கிறேன். எல்லோரும்நல்ல அனுபவம் பெற்றவர்கள்.அதனால் நான் கேப்டன்ஷியில் தனியாக பெரிதாக ஒன்றும் செய்வதற்கு கிடையாது” என்று கூறியிருக்கிறார்.