“146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல் கல்” பரபரப்பான ஆட்டத்தில் வரலாற்று வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி!

0
2714

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வந்தது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் துவங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 435 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் டிக்லேர் செய்தது. ஜோ ரூட் 153 ரண்களும் ஹாரி ப்ரூக்ஸ் அபாரமாக ஆடி 186 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து தனது இரண்டு முதலாவது இன்னிங்ஸில் ஆடிய நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி அபாரமாக ஆடி 73 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஸ்டூவர்ட் ப்ராட் நான்கு விக்கெட்டுகளையும் ஜாக் லீச் மற்றும் ஆண்டர்சன் தல மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஃபாலோ ஆன் ஆடிய நியூசிலாந்து அணி சிறப்பான பேட்டிங் டிஸ்ப்ளேவை வெளிப்படுத்தியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் லேத்தம் மற்றும் கான்வே ஆகியோர் முதலாவது விக்கெட் இருக்கு 149 ரன்கள் சேர்த்தனர். அதன் பிறகு அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பாக ஆடி சதம் எடுத்தார். 132 ரன்களில் அவர் அவுட் ஆனார். ஆல் ரவுண்டர் டேரில் மிச்சல் 54 ரன்கள் மற்றும் டாம் பிளெண்டல் 90 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 483 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்ஸில் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இலக்கை நோக்கி அதிரடியாக பயணிக்க துவங்கியது. ஒரு கட்டத்தில் 80 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறிக் கொண்டிருந்தத நேரத்தில் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் மற்றும் தற்போதைய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.

201 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார் வேக்னர். 202 ரன்களுக்குள் 95 ரண்களில் அபாரமாக ஆடிக் கொண்டிருந்த ஜோ ரூட்டும் அவுட் ஆனார். இதனால் போட்டி மீண்டும் நியூசிலாந்து அணியின் பக்கம் திரும்பியது. ஆனாலும் இறுதிவரை பென் ஃபோக்ஸ் போராடினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் மறுமுனையில் அணியின் ஸ்கோரை உயர்த்திய பென் ஃபோக்ஸ் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தபோது டீம் சவுதியின் பந்துவீச்சில் வேக்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் அவர்.

- Advertisement -

வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி இடம் ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. வெற்றிக்கு இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் விக்கெட்டை வீழ்த்தி பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினார் வேக்னர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை சமன் செய்தது . டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ரன் வித்தியாசத்தில் அணி வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும். 1993 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது . தற்போது நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணி ஒரு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறது .

146 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2494 டெஸ்ட் போட்டிகள் இதுவரை நடைபெற்றிருக்கின்றன. இதில் நான்காவது முறை மட்டுமே ஒரு அணி பாலோ ஆன் ஆகி டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று இருக்கிறது . இதற்கு முன் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஃபாலோ ஆன் ஆகி டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் நீல் வேக்னர் நான்கு விக்கெட்டுகளையும் கேப்டன் டிம் சவுதி 3 விக்கெட்டுகளையும் மேட் ஹென்றி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக கேன் வில்லியம்சனும் தொடர் நாயகனாக ஹாரி ப்ரூக்ஸ் தேர்வு செய்யப்பட்டனர்.