இந்திய கிரிக்கெட்

ரோகித் பண்றது ஆச்சரியமா இருக்கு.. இந்த ரெண்டு விஷயம் நடக்கலனா எல்லாமே தப்பாயிடும் – கும்ப்ளே கருத்து

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா செய்திருக்கும் மாற்றங்கள் தனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாக அனில் கும்ப்ளே கூறியிருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் மற்றும் ஆகாஷ் டீப் என 3 மாற்றங்கள் இந்திய அணியில் செய்யப்பட்டு இருந்தது. குல்தீப் யாதவ், கேஎல்.ராகுல், முகமது சிராஜ் 3 வீரர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தார்கள்.

சொந்த மண்ணில் இந்திய அணி நிர்வாகம் தடுமாற்றம்

இந்த தொடரில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த காரணத்தினால் இரண்டாவது போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதன் காரணமாக தேவைப்படும் எல்லா மாற்றங்களையும் இந்திய அணி நிர்வாகம் செய்ய வேண்டிய இடத்தில் இருந்தது.

எனவே எப்போதும் இல்லாத அளவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு மூன்று மாற்றங்களை இந்திய அணி நிர்வாகம் செய்திருக்கிறது. பொதுவாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் இருந்து இன்னொரு போட்டிக்கு இத்தனை மாற்றங்கள் செய்யப்படாது.

- Advertisement -

ரோகித் செய்வது ஆச்சரியமளிக்கிறது

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறும் பொழுது “கேஎல்.ராகுல் தொடர்ந்து ஆறாவது இடத்தில் தக்கவைக்கப்படுவார் என்று நான் நினைத்தேன் ஆனால் அவர் பேட்டிங் ஆர்டரில் மேலும் கீழும் நகர்த்தப்பட்டு இருக்கிறார். பேட்டிங் ஃபார்ம் இல்லாததால் வெளியேற்றப்படும் இருக்கிறார். சர்பராஸ் கான் வாய்ப்பு பெற்று இருக்கிறார். தற்போது வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு தெளிவான மெசேஜ் சொல்லப்பட்டு இருந்தால் பிரச்சனை கிடையாது. இல்லையென்றால் இந்தியா செய்த மூன்று மாற்றங்கள் எனக்கு ஆச்சரியம் அளிக்கும்”

இதையும் படிங்க : பங்களாதேஷ் அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா.. WTC புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்.. நியூஸி ஏமாற்றம்

“உண்மையில் உங்களிடம் அக்சர் படேல் இருக்கிறார். அவர் உங்களுக்கு பந்துவீச்சில் மட்டும் இல்லாது பேட்டிங்கிலும் போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். இப்படி இருக்கும் பொழுது திடீரென உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் அக்சர் படேலை வீழ்த்தி வாய்ப்பு பெற்றது ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by