பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
பங்களாதேஷ் சொந்த மண்ணில் தோல்வி
இந்த போட்டியில் டாஸ் வென்று விளையாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 308 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி சுதாரித்து 307 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு 106 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி மூன்று விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 10 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷ் நாட்டில் தென் ஆப்பிரிக்க அணி பெற்ற டெஸ்ட் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்
தற்போது இந்த பட்டியலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இதற்கு அடுத்த இடத்தில் இலங்கை அணி இருக்கிறது. இந்திய அணியை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய நியூசிலாந்து அணி நான்காவது இடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
இதையும் படிங்க : WTC-ல் அஸ்வின் படைத்த மெகா சாதனை.. ஆஸியின் நாதன் லயன் ரெக்கார்டை உடைத்தார்.. புனே 2வது டெஸ்ட்
மேலும் அடுத்தடுத்து சொந்த நாட்டில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாட இருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் இடத்திற்கு தென் ஆப்பிரிக்கா அணி தற்பொழுது முன்னேறி இருக்கிறது.
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :
இந்தியா – 68.06
ஆஸ்திரேலியா – 62.50
இலங்கை – 55.56
தென்னாப்பிரிக்கா – 47.62
நியூசிலாந்து – 44.44
இங்கிலாந்து – 43.06
பங்களாதேஷ் – 30.56
பாகிஸ்தான் – 25.93
வெஸ்ட் இண்டீஸ் – 18.52






