இந்திய கிரிக்கெட்

எப்படி அந்த மனுஷன் இப்படி ஆடுறார்ன்னு தெரியல.. எனக்கே ரொம்ப வியப்பா இருக்கு – இந்திய முன்னாள் கோச்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்ற வரும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுழற் பந்துவீச்சாளரான அணில் கும்ப்ளே இந்திய சுழற் பந்துவீச்சாளர் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதற்குப் பிறகு முதல் இன்னிங்ஸ் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் ஃபாலோ ஆன் பெற்று தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. இதில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இவரது ஆட்டம் குறித்து இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்லே பாராட்டி பேசியிருக்கிறார்.

- Advertisement -

இவர் குறித்து விரிவாக பேசும் போது “குல்தீப் யாதவுக்கு நான் எப்போதுமே மிகப்பெரிய ரசிகன் அவர் மிகவும் அற்புதமான பவுலர். குறைந்த வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தாலும் அதிலும் அவர் எப்போதும் போட்டியை வெல்லக் கூடிய திறன் கொண்டவராக இருக்கிறார். தொடர்ந்து விளையாடாமல் இதுபோன்ற செயல் திறனை வெளிப்படுத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. முதல் இன்னிங்ஸ் முடிவில் அவர் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கை குறைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

இதையும் படிங்க:4 அரைசதங்கள்.. உலக சாம்பியன் தென் ஆப்பிரிக்காவை கதறவிடும் பாகிஸ்தான் அணி – முதல் டெஸ்ட்

இந்திய அணியின் இன்று பந்து வீசத் திரும்பும்போது அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று நம்புகிறேன். சிவப்பு அல்லது வெள்ளை பந்து என எதுவாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரது அற்புதமான ஆட்டம் சிறப்பாக வெளிவருகிறது” என்று பாராட்டிப் பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts