எப்பொழுதும் கூலாக இருக்கும் மகேந்திர சிங் தோனி கடும் கோபத்தில் இருந்த 5 தருணங்கள்

0
1158
Dhoni Angry

மகேந்திர சிங் தோனி அனைவரும் மிஸ்டர் கூல் என்று தான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு மைதானத்தில் மிக தன்மையாக ஐஸ்கட்டி போல எப்பொழுதும் கூலாக இருப்பார். எதிரணி வீரருடன் சரி தனது அணியில் இருக்கும் வீரர்கள் மத்தியிலும் எப்பொழுதும் மிக அமைதியாக நிதானமாக தன்னுடைய ஆட்டத்தை மேற்கொள்வார்.

இருப்பினும் ஒரு சில தருணங்களில் மகேந்திர சிங் தோனி தனது கூல் தன்மையை இழந்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்படி அவர் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திய சில தருணங்களை பற்றி தற்போது பார்ப்போம்

- Advertisement -

1. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்

Dhoni angry in IPL

2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டியின் இறுதி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 18 ரன்கள் தேவைப்பட்டது. ஒருவழியாக முதல் மூன்று பந்துகளில் 10 ரன்கள் அடிக்க கடைசி மூன்று பந்துகளில் இன்னும் 8 ரன்கள் தேவைப்பட்டது.

அந்த ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த ஓவரின் 4-வது பந்தை அவர் வீசும் வேளையில் நடுவர் நோபால் என்று அறிவித்தார். ஆனால் லைன் நடுவர் அது முறையான பால் என்றும் நோ பால் இல்லை என்று கூறியதை தொடர்ந்து நடுவர் மீண்டும் தனது முடிவை மாற்றிக் கொண்டார். இது மகேந்திர சிங் தோனி கோபத்திற்கு ஆளாக்கியது.

எதற்காக இப்படி மாறி மாறி முடிவை மாற்றி கூறுகிறீர்கள் என்று நேராக மைதானத்திற்குள் வந்து நடுவர்கள் இடம் மிகப்பெரிய வாக்கு வாதத்தை மேற்கொண்டார். இருப்பினும் லைன் நடுவர் அந்த பந்து முறையான பந்து தான் என்பதில் திட்டவட்டமாக இருந்தார். மகேந்திர சிங் தோனி அவ்வளவு கோபமாக நடந்து கொண்டது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

கடைசி இரண்டு பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தில் மிட்செல் சான்ட்னர் சிக்ஸர் அடிக்க அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதியில் த்ரில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

2. மணிஷ் பாண்டேவை திட்டியது

2018 ஆம் ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மகேந்திர சிங் தோனி மணிஷ் பாண்டே உடன் இணைந்து மிக அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் இணைந்து 98 ரன்கள் இறுதிவரை அடித்தார்கள்.

அப்பொழுது 19வது ஓவரில் முதல் பந்தை மனிஷ் பாண்டே அடித்து விட்டு ஒரு ரன் ஓடினார். ஆனால் மகேந்திர சிங் தோனி அந்த பந்தில் 2 ரன்ஓடியிருக்க வேண்டும் என்று நினைத்து மனிஷ் பாண்டே மீண்டும் ஓட அழைத்தார். அதை மனிஷ் பாண்டே கவனிக்காமல் இருந்துவிட்டார்.

இதனால் கோபம் கொண்ட தோனி பந்தை பார்க்காமல், என்னை பார் என்று ஆத்திரமாக அவரை திட்டி தீர்த்தார். மகேந்திர சிங் தோனி அவ்வாறு மணிஷ் பாண்டேவை திட்டியது போட்டியை பார்த்த ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி 2011 – 2012

2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடியது. அப்பொழுது ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடி கொண்டு இருக்கும் போது சுரேஷ் ரெய்னா பந்து வீசினார். அந்த பந்தில் விளையாடிய மைக்கேல் ஹசி இறங்கி வந்து விளையாட முயற்சி செய்த போது பின்னால் இருந்த மகேந்திர சிங் தோனி அவரை ஸ்டம்பிங் செய்தார்.

இந்த முடிவு மூன்றாம் நடுவர் வரை சென்றது. மூன்றாம் நடுவர் மைக்கேல் ஹசி அவுட் என்று கூறினாலும், மைதானத்தில் இருந்த நடுவர்கள் வீடியோவை பார்த்து மைக்கல் ஹசி அவுட் இல்லை என்று அவரை மீண்டும் அழைத்தார்கள். ஆனால் உண்மையில் மைக்கேல் ஹசி உடைய கால்கள் கிரீஸ் லைனை தொட்டி இருக்கவில்லை, அவர் அவுட் ஆனது உண்மைதான்.

இதனால் தவறுதலாக நடுவர்கள் அவரை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தது மகேந்திர சிங் தோனி ஆத்திரமடையச் செய்தது. ஆத்திரத்தை அடக்கமுடியாமல் மகேந்திர சிங் தோனி நடுவர்கள் இடம் சென்று மிகப்பெரிய வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங் 2011 உலக கோப்பை தொடர்

Dhoni Angry at Yuvraj

2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது அனைவருக்கும் தெரியும். இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை இந்திய அணி எட்டிக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் 22 பந்துக்கு 22 ரன்கள் இந்திய அணி எடுக்க வேண்டும் என்று இருந்த நிலையில் மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது குலசேகரா வீசிய பந்தை மகேந்திர சிங் தோனி லாங் ஆனுக்கு தூக்கி அடித்தார். அந்த பந்தில் நிச்சயமாக இரண்டு ரன்கள் இருந்திருக்கலாம். ஆனால் யுவராஜ் சிங் இரண்டாவது ரன் ஓட மறுத்துவிட்டார்.

இந்த விஷயம் மகேந்திர சிங் தோனி சற்று கோபப்படுத்தியது. உடனடியாக அவரது முகம் மாறியது அனைத்து ரசிகர்களால் பார்க்க முடிந்தது. மகேந்திர சிங் தோனி அவ்வாறு கோபப்பட்டது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது.

5. ரவீந்திர ஜடேஜாவை முறைத்தது

2015ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. அந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது. சென்னை அணியில் பிராவோ கடைசி ஓவரை வீசினார்.

முதல் பந்தை பிராவோ நோபால் ஆக வீசினார். அந்த பந்தில் கிறிஸ் மோரிஸ் மிக அற்புதமாக விளையாடி சிக்சர் அடித்தார். அதற்கடுத்த வீசிய பந்தில் மோரிஸ் மிக அற்புதமாக விளையாடி இரண்டு ரன்கள் ஓடினார். அந்த பந்து ரவீந்திர ஜடேஜா கைக்குச் சென்றது, ரவீந்திர ஜடேஜா சற்று மெதுவாக நடந்து கொண்டதால் கிறிஸ் மோரிஸ் எளிதாக 2 ரன்கள் ஓடினார்.

இதனை மகேந்திர சிங் தோனி எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உடனடியாக ரவீந்திர ஜடேஜாவை கோபமாக முறைத்தது அனைத்து ரசிகர்களை மட்டுமின்றி சென்னை அணி வீரர்களையும் ஆச்சிரிய பட வைத்தது. அந்த போட்டியின் இறுதியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.