விஜய் ஹசாரே டிராபி.. 21 வயதான கேகேஆர் வீரருக்கு தலையில் காயம்.. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை

0
200

விஜய் ஹசாரே டிராபி தொடரில் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக ஃபில்டிங் செய்யும் போது, மும்பை வீரரும், KKR நட்சத்திரமுமான 21 வயதான அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

ரகுவன்ஷி ஃபில்டிங் செய்யும் போது காயமடைந்தார். தனுஷ் கோட்டியான் வீசிய 30வது ஓவரில் சௌரப் ராவத் அடித்த பந்தை டீப் மிட் விக்கெட் பகுதியில் இருந்து ஓடிவந்து பிடிக்க முயன்றபோது, அவர் தடுமாறி விழுந்தார். இதில் தலையிலும் தோள்பட்டையிலும் அடிபட்டு மூளையதிர்ச்சி ஏற்பட்டது.

- Advertisement -

இளம் வீரர் காயம்:

காயமடைந்த ரகுவன்ஷி, சிறிது நேரம் குனிந்திருந்த பின்னர் தரையில் சாய்ந்தார். மும்பை அணியின் பிசியோ உடனடியாக விரைந்தார். அவரால் எழுந்து நிற்க முடியாததை உணர்ந்து, ஸ்ட்ரெச்சர் வரவழைக்கப்பட்டு, அவர் SDMH மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் மும்பை அணி 331 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகளை இழந்தது. அங்கிரிஷ் ரகுவன்ஷி 20 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். ஹர்திக் தமோரே 82 பந்துகளில் 93* ரன்களும், முஷீர் கான் 56 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

ரோகித் டக்அவுட்:

சர்பராஸ் கான் 49 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து மும்பை அணிக்கு வலு சேர்த்தனர். கேப்டன் ஷர்துல் தாக்கூர் 29 ரன்கள் மற்றும் ஷம்ஸ் முலானி 48 ரன்கள்)போன்றோரும் பங்களித்தனர். முதல் போட்டியில் 155 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் ஷர்மா, இந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். உத்தராகண்ட் அணி சார்பில் தேவேந்திர போரா 74 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையும் படிங்க: ரூ.7 கோடி வீரருக்கு ஆர்சிபி அணியில் இடமிருக்காது.. முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே கருத்து

முதல் லீக் ஆட்டத்தில், மும்பை அணி சிக்கிம் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. விஜய் ஹசாரே டிராபிக்கான மும்பை அணி விவரம்: ரோஹித் ஷர்மா (இரண்டு போட்டிகள்), ஷர்துல் தாக்கூர் (கேப்டன்), ஹர்திக் தமோரே (விக்கெட் கீப்பர்), இஷான் முல்சந்தானி, ஷம்ஸ் முலானி, முஷீர் கான், தனுஷ் கோட்டியான், அங்கிரிஷ் ரகுவன்ஷி, துஷார் தேஷ்பாண்டே, சர்பராஸ் கான், ஓம்கார் தர்மலே, சித்தேஷ் லேட், சில்வெஸ்டர் டிசோசா, சின்மய் சுத்தராம், சாய்ராஜ் பாட்டீல், ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யான்ஷ் ஷெட்கே ஆகியோர் ஆவர்.

- Advertisement -