ஜெய்ஸ்வால்கிட்ட விக்கெட்டை கேட்டு வாங்கிய ஆண்டர்சன்.. களத்தில் என்ன நடந்தது?.. சுவாரசிய சம்பவம்

0
1225
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்றால், பந்து வீச்சில் 40 வயதை தாண்டிய ஜேம்ஸ் ஆண்டர்சன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்காமல் 179 ரன்கள் எடுக்க, ஆறு விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பான பந்தின் மூலமாக ரவிச்சந்திரன் அஸ்வினை 20 ரன்களில் வெளியேற்றினார். மேலும் இருவருக்கும் இடையே களத்தில் சில வாக்குவாதங்களும் நடைபெற்றது.

இந்த நேரத்தில் ஜெய்ஸ்வால் 191 ரன்கள் எடுத்து இரட்டை சதத்தை எதிர்பார்த்து களத்தில் நின்றார். இதற்குமேல் பொறுமை காட்டினால் சரி வராது என்று ஒரு சிக்சர் மற்றும் பௌண்டரி அடித்து ஜெய்ஸ்வால் தன்னுடைய முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.

ஜெய்ஸ்வால் நேற்று ஆட்டத்தை துவங்கி இன்று 277 வது பந்தை சந்தித்து 19 பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸ்ர்கள் உடன் இரட்டை சதத்தை அடித்தார். இந்த போட்டியில் அவர் ஒரே ஒரு முறை தான் தவறான ஷார்ட் விளையாட நேற்று சென்றிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு பந்தை வெளியில் வீசிவிட்டு, “இந்தப் பந்தை நீ அடிக்க மாட்டாயா?” என்று கேட்டார்.

இதற்கு ஜெய்ஸ்வால் சிரித்தபடி எதுவும் பதில் சொல்லவில்லை. இதற்கு அடுத்த பந்தை ஜேம்ஸ் ஆண்டர்சன் தூண்டுதலால் இறங்கி வந்து அடிக்கப் பார்த்த ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தார். இது சுவாரசிய இன்னொரு விஷயம் என்னவென்றால், ஜேம்ஸ் ஆண்டர்சன் அந்தப் பந்தையும் வெளியில்தான் வீசினார். திட்டமிட்டு இளம் வீரரை தூண்டி விக்கெட்டை எடுத்து விட்டார்.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் இரட்டை சதம்.. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. அபார சாதனை

40 வயதை தாண்டி இந்த போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மொத்தமாக 25 ஓவர்கள் பந்துவீசி, நான்கு மெய்டன்கள் செய்து, 47 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். ஒரு ஓவருக்கு 1.9 ரன்கள் மட்டுமே தந்திருக்கிறார். மேலும் இன்றைய போட்டியில் எட்டு ஓவர்கள் தொடர்ந்து வீசியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.