இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் தோல்வி அடைந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு என்ன நடக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
தற்போது இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் தகுதி பெற வேண்டும் என்றால், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 எனக் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணிக்கு ஃபைனல் போவதில் நெருக்கடி கொடுக்கக்கூடிய அணிகளாக ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை என நான்கு அணிகள் இருக்கின்றன. இந்த நான்கு அணிகள் அடுத்து விளையாடும் டெஸ்ட் தொடரின் முடிவுகளைப் பொறுத்து இந்திய அணியின் பைனலுக்கான வாய்ப்புகள் அமைகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-3 இன்று தோல்வி அடைந்தாலும் கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம். இந்த வகையில் இந்திய அணி தோல்வி அடையும் பொழுது இந்திய அணியின் வெற்றி சதவீதம் 53.51 ஆக இருக்கும். இது ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வெற்றி சதவீதம் ஆகும்.
இங்கிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட நியூசிலாந்து செல்கிறது. அந்த டெஸ்ட்ட தொடரில் இங்கிலாந்து அணி அந்தத் தொடரை வெல்லாவிட்டாலும் கூட 1-1 என சமணில் முடித்தால் போதும். அப்பொழுது நியூசிலாந்து அணியின் வெற்றி சதவீதம் 52.38 என இந்திய அணியை விட கீழே இருக்கும்.
அடுத்து தென் ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் முடிய வேண்டும். இதற்கடுத்து மீண்டும் தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் விளையாடும் 2 போட்டிகள் டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலையில் முடிய வேண்டும். இல்லையென்றால் பாகிஸ்தான் முழுவதும் வென்றாலும் இந்திய அணிக்கு நல்லதாகவே அமையும். அப்பொழுது தென் ஆப்பிரிக்காவில் வெற்றி சதவீதம் 52.78 என இந்திய அணியை விட கீழே இருக்கும்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் தொடர்.. ஆஸி அணியில் வீரர்கள் திடீர் மாற்றம்.. புதிய கேப்டன்.. இந்திய தொடருக்காக அதிரடி முடிவுகள்
அடுத்து இலங்கை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியா அணி 0-0 எனத் தொடரை சமநிலையில் முடிக்க வேண்டும். இல்லையென்றால் தொடரை வெல்லவும் செய்யலாம். இப்படி நடக்கும்போது இலங்கை அணியின் வெற்றி சதவீதம் 51.28 என இந்திய அணியை விட குறைவாக இருக்கும். இதன் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும்!