பாகிஸ்தான் தொடர்.. ஆஸி அணியில் வீரர்கள் திடீர் மாற்றம்.. புதிய கேப்டன்.. இந்திய தொடருக்காக அதிரடி முடிவுகள்

0
420
Australia

தற்போது பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் தற்பொழுது திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரில் தற்காலிகமாக முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

மீண்டும் கேப்டனாக வந்த கம்மின்ஸ்

தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கேப்டனாக கம்மின்ஸ் மீண்டும் திரும்பி வந்தார். மேலும் முதல் ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வென்று கொடுத்து ஆட்டநாயகன் விருதும் வென்றார். இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்க இருக்கிறது. இதிலும் கம்மின்ஸ் விளையாடுகிறார்.

இதைத்தொடர்ந்து நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் கம்மின்ஸ், ஸ்மித், லபுசேன், ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஆகிய ஐந்து வீரர்களும் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு பதிலாக ஸ்பென்சர் ஜான்சன், சேவியர் பார்ட்லெட், லான்ஸ் மோரீஸ் மற்றும் விக்கெட் கீப்பர் ஜோஸ் பிலிப் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா இரண்டு அணிக்கும் புதிய கேப்டன்

பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் நவம்பர் 14ஆம் தேதி துவங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு புதிய கேப்டனாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜோஸ் இங்லீஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணியில் மூத்த வீரர்களாக மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா போன்ற வீரர்கள் இருந்த பொழுதிலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஜோஸ் இங்லீஷை கேப்டனாக நியமித்திருக்கிறது. மேலும் இந்திய அணிக்கு எதிராக நவம்பர் 22ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்காக இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதையும் படிங்க : பெரிய கார் விமானம் எல்லாம் கிடைக்காது.. ஆஸி தொடருக்கு முன்ன ரோகித் விராட் இதை செய்யணும் – முகமது கைஃப் வலியுறுத்தல்

ஆஸ்திரேலிய டி20 அணி :

ஜோஷ் இங்கிலிஸ் (கே), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனோலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, ஸ்பென்சர் ஜான்சன், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா.

- Advertisement -