தோனிக்கு பின்பு அடுத்த சிஎஸ்கே கேப்டன் இவர் தான்.. அணியில் என்ன நடந்தது.. உண்மையை உடைத்த அம்பத்தி ராயுடு

0
285

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை ராயுடு வெளிப்படையாகவே கூறிவிட்டார். youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராயுடு, சிஎஸ்கே அணியில் என்ன நடந்தது எப்படி கோப்பையை வென்றோம் என்பது குறித்து பேசினார்.

இது குறித்து பேசிய அவர் இதுதான் என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி என்பதை நான் முன்கூட்டியே முடிவு செய்து விட்டேன். இதனால் எனக்கு உணர்ச்சிகரமாகவே இருந்தது. அதுவும் கோப்பையை வென்றது நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

- Advertisement -

கோப்பையை நானும் சேர்ந்து வாங்கப் போகிறேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. தோனி தான் என்னை அழைத்து வாங்க சொன்னார். தோனிக்கும் ஜடேஜாக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. மீடியா தான் அதனை தவறாக திரித்து விட்டார்கள்.

சிஎஸ்கே அணி 2022 ஐ பி எல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடியது. வீரர்கள் யாரும் தங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. இதன் காரணமாக தான் ஜடேஜா ஏமாற்றத்துடன் இருந்தார்.

இதனால் ஐபிஎல் போட்டியில் இருந்து ஜடேஜா பாதியில் விலகி சென்றார். இதை தவிர தோனிக்கும் ஜடேஜாவுக்கும் எந்த பிரச்சனையும் இருந்தது போல் எனக்கு தெரியவில்லை. அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி தான் கேப்டனாக செயல்படுவார் என்று நான் கேள்விப்பட்டேன்.

- Advertisement -

என்னை பொறுத்தவரை தோனி விளையாடும் வரை அவர்தான் கேப்டனாக இருக்க வேண்டும். அதன்பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர் திறமையான வீரர். ஒரு அணி நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்று நன்கு அறிந்திருக்கிறார்.

மேலும் தன்னடக்கம் உடைய வீரராகவும் இருக்கிறார். இப்போதிலிருந்து தோனி ருதுராஜை நன்றாக பார்த்துக் கொண்டு வருகிறார். அவருக்கு பல விஷயங்களை சொல்லித் தருகிறார். இதனால் ருதுராஜ் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு எட்டு முதல் 10 ஆண்டுகள் வரை கேப்டனாக செயல்படுவார் என நான் நம்புகிறேன்.

என்னை பொருத்தவரை இந்திய அணியில் ருதுராஜ் இடம் பெற்று இருக்க வேண்டும். இந்திய அணி எந்தெந்த போட்டிகளில் எல்லாம் விளையாடுகிறதோ அனைத்து பிரிவுகளும் ருதுராஜ் இருந்திருக்க வேண்டும். ருதுராஜ் திறமையை இந்திய அணி நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.