ஐபிஎல் 2024

ஒரு காரணத்துக்காக ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை ஜெயிக்கனும்.. கோலி தோள்ல ஏறிதான் வராங்க – அம்பதி ராயுடு பேச்சு

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. நேற்று அவர்களது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி தகுதி பெற்றார்கள். இந்த நிலையில் ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரை வெல்ல வேண்டுமென சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பதி ராயுரு கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் 8 போட்டிகளில் 7 போட்டிகளை ஆர்சிபி அணி தோற்றது. அத்தோடு அவர்களது பிளே ஆப் வாய்ப்பு முடிந்து விட்டது என எல்லோரும் கருதினார்கள். மேற்கொண்டு இருக்கும் ஆறு போட்டிகளையும் நல்ல முறையில் வென்று நல்ல ரன் ரேட்டை கொண்டு வந்தால் மட்டுமே, பிளே ஆப் சுற்றுக்கு ஒரு 10% வாய்ப்பு இருந்தது.

இதை அப்படியே பிடித்த ஆர்சிபி அங்கிருந்து எந்த ஒரு போட்டியையும் தோற்காமல், மிகச் சிறப்பாக விளையாடி, ஆறு போட்டிகளையும் வென்று தற்பொழுது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் பொதுவாகவே ஆர் சி பி அணியின் இந்த மீள் எழுச்சி சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்து கொண்டிருந்த பொழுது, தனி ஒரு வீரராக விராட் கோலி மட்டும் விடாமல் முயற்சி செய்து அணியை கௌரவமான ஸ்கோருக்கு கொண்டு வந்து கொண்டிருந்தார். அவர் ஒருவரால்தான் அந்த அணி மேற்கொண்டு தப்பித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “இது விராட் கோலியின் ஆற்றல், அவரது நோக்கம் மற்றும் வெற்றிக்கான அவருடைய பசியை காட்டுவது. இன்று போட்டியின் ஆரம்பத்திலும் போட்டிக்கு இடையிலும் வீரர்களிடம் சுறுசுறுப்பாக பேசுவதை நாம் பார்த்தோம். அது முழுக்க உணர்ச்சி வசமாக இருந்தது. மேலும் நான் விராட் கோலி பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படிங்க : தோனியின் ஓய்வை யோசிச்சா பைத்தியம் பிடிச்சிடும்.. அதுபற்றி தெரிந்த ஒரே ஆள் ஒருவர்தான் – சிஎஸ்கே பவுலிங் கோச் பேட்டி

இந்த சீசனில் ஆர் சி பி அணி விளையாடிய விதத்திலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இந்த ஐபிஎல் தொடரை அவர்கள் வெல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இதேபோல் விராட் கோலி அந்த அணிக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடி ஆரஞ்சு தொப்பையை வென்று இருக்கிறார். மேலும் ஆர்சிபி அணி ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய தோள் மீது ஏறி தான் இந்த தொடரில் வந்தது. இதற்காகவே அந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by