2024 ஐபிஎல் கப் இவர்களுக்குதான்.. இந்த ரெண்டு பேர் பைனல்ல மாஸ் பண்ணுவாங்க – மேத்யூ ஹைடன் கணிப்பு

0
376
IPL2024

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொள்ள இருக்க, இதில் யார் வெற்றி பெறுவார்கள்? என்று மேத்யூ ஹைடன் தனது கணிப்பை கூறி இருக்கிறார்.

இறுதிப்போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் கொல்கத்தா அணி லீக் சுற்றில் 20 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தது. மேலும் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

ஹைதராபாத் அணி தங்களது முதல் தகுதிச் சுற்றில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்து, இரண்டாவது தகுதிச்சுற்றில் ராஜஸ்தான் அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. லீக் சுற்றிலும் கொல்கத்தா அணி ஹைதராபாத் அணியை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பலரது கணிப்பாக இந்த முறை கம்பீர் மென்டராக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்பது இருக்கிறது. இதே கருத்தையே மாத்தி ஹைடனும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து மேத்யூ ஹைடன் கூறும்பொழுது “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் என்பதில் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். போட்டிக்கு நடுவில் கொல்கத்தாவுக்கு விடுமுறை நாட்கள் இருப்பதால், இந்தப் போட்டியை எப்படி பார்ப்பது என்றும் ஹைதராபாத் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்தும் நல்லபடியாக தெரிந்து கொள்ள முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : யுவி பாஜி இந்த விஷயத்தில் நான் அவரை விட பெஸ்ட்னு சொல்வார்.. இப்ப ஹேப்பியா இருப்பார் – அபிஷேக் ஷர்மா பேட்டி

மேலும் கொல்கத்தா அணி ஹைதராபாத் அடியை தோற்கடித்து பெரும் வேகத்தைப் பெறப்போகிறது. குறிப்பாக சுனில் நரைன் மற்றும் வரும் சக்கரவர்த்தி இருபது சுழல் பந்து வீச்சும், சென்னை சேப்பாக்கம் சிவப்பு களிமண் ஆடுகளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.