அமேசான் ப்ரைமில் இனி கிரிக்கெட் போட்டிகளையும் நேரடியாக பார்க்கலாம் – வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்

0
128
Cricket Matches in Amazon Prime

அமேசான் பிரைம் நிறுவனம் உலக அளவில் நாளுக்கு நாள் நிறைய வாடிக்கையாளர்களை ஈர்த்துக் கொண்டே வருகிறது. திரைப்படங்கள், சீரியஸ் என நிறைய பொழுதுபோக்கு சமாச்சாரங்களை பெரும் தொகைக்கு வாங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துக் கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்க்கும் ஒரு புதிய யுத்தியை அந்த நிறுவனம் தற்போது கையில் எடுத்துள்ளது. அடுத்த வருடம் நியூசிலாந்து அணி விளையாடும் போட்டிகளை நேரடியாக அமேசான் ப்ரைம் அக்கவுண்டில் ஒளிபரப்ப போகிறது.

- Advertisement -

நியூசிலாந்து அணி கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்க்கலாம்

நியூசிலாந்தில் நியூசிலாந்து அணி விளையாட போகும் கிரிக்கெட் தொடர்களை அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் நேரடியாக தங்களது அமேசான் ப்ரைம் அக்கவுண்ட் மூலமாக பார்க்கலாம். அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையில் நடைபெற இருக்கிறது. பின்னர் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது.

பின்னர் மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. அதனையடுத்து மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே ஒரு டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு இடையில் பிப்ரவரி மாதம் 9ஆம் முதல் தேதி நியூசிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகள் மோதும் ஒரு டி20 போட்டி மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெற இருக்கிறது

நியூசிலாந்தில் நடைபெறும் மேற்கூறிய அனைத்து கிரிக்கெட் தொடர்களையும் அமேசான் ப்ரைம் அக்கவுண்ட் வாடிக்கையாளர்கள் தங்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் இருந்தோ அல்லது தொலைக்காட்சியில் இருந்தோ தங்களது அமேசான் பிரைம் அக்கவுண்ட் மூலமாக நேரடியாக கண்டு களிக்கலாம். அமேசான் ப்ரைம் நிறுவனம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி தற்போது கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -