அதிசய கிரிக்கெட் வீராங்கனை.. 17 வயதில் 2 நாடுகளுக்கு ஆடி வரலாற்று சாதனை.. யார் இந்த மஹிக்கா கவுர்.?

0
2209

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நீண்ட அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டிஎல்எஸ் முறையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் களுக்கு 186 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அணியின் டேனியல் வியாட் 48 ரண்களும் ஆலிஸ் கேப்ஸி 51 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து மழை பெய்ததால் இலங்கை அணிவோர்களின் 68 ரன்கள் எடுக்க வேண்டும் என்று டக்வர்த் லிவீஸ் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை மகளிர் அணி நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மஹிக்கா கவுர் சிறப்பாக பந்து வீசி இலங்கை மகளிர் அணியின் கேப்டன் சாமரி அதப்பத்து விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார் . சிறப்பாக பந்து வீசிய இவர் 2 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

இவரைப் பற்றிய சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தற்போது இங்கிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் மகிக்காக கவுர் தனது 12 வயதிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு தாய்லாந்து மகளிர் டி20 ஸ்மேஷ் போட்டியில் இவர் யுஏஇ அணிக்காக விளையாடி இருக்கிறார். மேலும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் இந்தோனேசியா அணிக்கு எதிரான சர்வதேச போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக அறிமுகமானார்.

மேலும் இவர் யுஏஇ அணிக்காக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி மகளிர் ஆசிய கோப்பை தகுதி சுற்று போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். மேலும் 2021 ஆம் ஆண்டின் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை காண தகுதிச்சுற்று, 2022 ஆம் ஆண்டின் ஜிசிசி மகளிர் வளைகுடா கோப்பை போன்ற போட்டிகளிலும் யுஏஇ அணிக்காக விளையாடி உள்ளார். இதுவரை 19 போட்டிகளில் யுஏஇ அணிக்கு இவர் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மீண்டும் 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பிய இவர் தி 100 போட்டியில் மான்செஸ்டர் ஒரிஜினல் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து மகளிர் ஏ அணியில் இடம்பெற்ற இவர் ஆஸ்திரேலியா மகளிர் ஏ அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடினார். தற்போது இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி20 சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார்.

2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் பிறந்த இவர் 12 வயதில் மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் யுஏஇ அணிக்காக அறிமுகமானார் . 19 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவரது சிறந்த பந்துவீச்சு 21 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதாகும். இதுவரை 4 மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் இரண்டு நாடுகளுக்காக விளையாடி இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் தன்னை ஐந்தாவது ஆக இணைத்து இருக்கிறார் மகிக்கா கவுர் .

சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு அணிகளுக்காக விளையாடிய வீராங்கனைகள்:

பெர்னாடின் பெசுய்டன்ஹவுட் 2014-15 தென்னாப்பிரிக்கா 2018-23 நியூசிலாந்து

சாமனி செனவிரத்ன 2010-13 இலங்கை 2018-22 யுஏஇ

தீபிகா ரசாங்கிகா 2009-14 இலங்கை 2022 பஹ்ரைன்

கிம் கார்த் 2010-19 அயர்லாந்து
2022 முதல் ஆஸ்திரேலியா

மகிக்காக கவுர் 2019-22 யுஏஇ
2023 இங்கிலாந்து