“எனக்கு ஷார்ட் பந்து பலவீனமா?.. மும்பைக்காரன் எனக்கு இதை விளையாட தெரியாதா?” – கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர் பதிலடி பேச்சு!

0
485
Shreyas

இன்று உலகக் கோப்பை தொடரில் இலங்கையை அணிக்கு எதிரான போட்டியில் கில் மற்றும் விராட் கோலி இருவரும் 189 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

ஆனால் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததும் இந்திய அணிக்கு ஒரு சிறிய நெருக்கடி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கேஎல் ராகுலும் வெளியேறியதால் அழுத்தம் உண்டானது.

- Advertisement -

இந்த நேரத்தில் களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் கொஞ்சம் பொறுமையாக விளையாடுவார் ஆட்டத்தை நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ரன் வேகத்தை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடினார்.

இன்று அவர் 56 பந்துகளை சந்தித்து அதிரடியாக 82 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக இந்திய அணி தவறான நேரத்தில் விக்கெட்டுகளை இழந்த போதிலும் கூட, 50 ஓவர்களில் 357 ரன்கள் குவித்தது.

மேலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பந்துகளில் பலவீனம் இருக்கிறது என்று பொதுவாக கூறப்படுகிறது. இன்றும் கூட அப்படியான பந்துகளை இலங்கை பந்துவீச்சாளர்கள் வீசினார்கள். ஆனால் அவர் அதைக் கட்டுப்படுத்தி விளையாடினார்.

- Advertisement -

போட்டிக்கு பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரேயாஸ் இடம் பத்திரிக்கையாளர் ஒருவர் ஷார்ட் பந்துகளில் அவருக்கு பலவீனம் இருக்கிறது என்று கூறி கேள்வி கேட்க, அதற்கு ஸ்ரேயாஸ் ஒரு மிக நீண்ட விளக்கம் அளித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து ஸ்ரேயாஸ் பதிலளிக்கும் பொழுது ” ஷார்ட் பந்தில் முதலில் எனக்கு பிரச்சனை என்பது தவறு. அப்படி எனக்கு அதில் எந்த பலவீனமும், பிரச்சனையும் கிடையாது. மேலும் நீங்கள் அந்தப் பந்து என்னை தொந்தரவு செய்தது என்று சொல்கிறீர்கள். ஆனால் நான் அப்படியான பந்தை இன்று எத்தனை முறை அடித்தேன், அந்த பந்துகள் பவுண்டரிக்கும் சென்றதை நீங்கள் பார்த்தீர்கள்.

நீங்கள் ஒரு பந்தை அடிக்க முயற்சி செய்யும் பொழுது எப்படியும் ஆட்டமும் இழந்துதான் ஆகவேண்டும். இதே நான் ஒரு ஃபுல் லெந்த் பந்துக்கோ அல்லது ஸ்விங் பந்துக்கோ அடிக்கப்போய் தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தால், உடனே நீங்கள் எனக்கு இந்த மாதிரியான பந்துகளில் பலவீனம் என்று பேசுவீர்கள்.

எனவே கொஞ்சம் கவனியுங்கள், நாங்கள் எல்லா பந்துகளுக்கும் விளையாடி ஆட்டம் இழக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். என்னால் ஷார்ட் பந்துகள் விளையாட முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அப்படியான ஒரு எண்ணம் உங்களுக்கு இருக்கிறது. இது வெளியில் மக்களால் சொல்லப்படுகிறது அவ்வளவுதான்.

நான் மும்பையில் இருந்து வருகிறேன். இங்கு வான்கடேவில் எப்பொழுதும் பவுன்ஸ் இருக்கும். நான் என்னுடைய பெரும்பான்மையான போட்டிகளை இங்குதான் ஆடி இருக்கிறேன். எனவே எனக்கு இதை எப்படி சமாளிப்பது என்று நன்றாகவே தெரியும்.

நான் சில நாட்கள் விளையாடச் செல்லும் பொழுது ஆட்டம் இழக்கவும் செய்யலாம். சில சமயங்களில் அது பலனளிக்கும்; சில சமயங்களில் பலனளிக்காது. பெரும்பாலான நேரங்களில் எனக்கு அது பலன் அளிக்காமல் போனதால், எனக்கு அதில் பலவீனம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று என் மனதிற்கு தெரியும்!” என்று அதிரடியாக கூறியிருக்கிறார்!