ஜோ ரூட் தொடர்ந்து பாஸ்பால் விளையாடுவாரா?.. கடுப்பான மெக்கலம்.. காரசாரமான பதில்

0
1668
Root

இந்திய சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு பேட்டிங்கில் ஜோ ரூட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். அவருடைய ஆசிய கண்ட கிரிக்கெட் பேட்டிங் சராசரி மிகவும் சிறப்பாக இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகள் முடிவில், ஆறு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ரூட் இன்னும் 100 ரன்கள் அடிக்கவில்லை என்பது நம்ப முடியாத வகையில் ஆச்சரியமாக இருக்கிறது.

- Advertisement -

அவருடைய இந்த பேட்டிங் வீழ்ச்சிக்கு அதிரடியாக விளையாடும் பாஸ்பால் முறை தான் காரணம் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.

இதில் முக்கியமானவராக இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் குவித்த ஜோ ரூட்டுக்கு பாஸ்பால் விளையாடிதான் ரன் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை, அவரிடம் இருக்கும் சிறந்த பேட்டிங் தொழில்நுட்பம் மூலமாகவே ரன் அடிக்கலாம், அவரைச் சுற்றி மற்றவர்கள் பாஸ்பால் விளையாடலாம் என தொடர்ந்து கூறி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்டில் பும்ராவை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க போய் ரூட் ஆட்டம் இழந்தது, விமர்சனங்களை இன்னும் கடுமையாக மாற்றி இருக்கிறது. மேலும் 434 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, இங்கிலாந்து பாஸ்பால் அணுகுமுறையை சுற்றி எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கி இருக்கிறது.

பாஸ்பால் மற்றும் ஜோ ரூட் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பேசி உள்ள பயிற்சியாளர் மெக்கலம் “மக்கள் ஜோ ரூட் விளையாடியது போன்ற ஒரு ஷாட்டை பார்த்துவிட்டு, இந்த புதிய முறையை சமாளிக்க ஜோ ரூட் மிகவும் சிரமப்படுகிறார் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்.

விளையாட்டில் அவர் கொடுக்கும் தாக்கம் என்பது இன்னும் இன்னும் முக்கியம். ஜோ ரூட்டுக்கு இருக்கும் திறமைக்கும் அவர் செய்துள்ள சாதனைகளையும் வைத்து, அவர் தற்போது இருப்பது போலையே இருந்து விடுவார் என்று நினைக்கிறீர்களா?

இதையும் படிங்க : 199 ரன்னில் ஜெய்ஸ்வால்.. சர்பராஸ் கான் சொன்ன அட்வைஸ்.. களத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்

எங்களுக்கு சாதாரண ஜோ ரூட் வேண்டுமா? இல்லை சிறந்த ஜோ ரூட் வேண்டுமா? மற்றவர்கள் சொல்வது போல சோ ரூட் விளையாடினால் எத்தனை போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம்?” என்று கோபமாகப் பதில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -