இளம் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டும் – அவசியத்தை விளக்கியுள்ள மகேந்திர சிங் தோனி

0
50

இந்திய அணியில் விளையாடிய கேப்டன்கள் மத்தியில் எப்பொழுதும் மகேந்திர சிங் தோனிக்கு தனிப்பெயர் இருக்கும். ஒரு கேப்டனாக ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் அதைத்தொடர்ந்து உலக கோப்பை தொடர் அதை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி என மூன்று கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்று கொடுத்தவர் அவர்.

உலகில் உள்ள பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி பாராட்டிய நாம் கேள்விப்பட்டிருப்போம். வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் கூட அவரை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாட வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி கிரிக்கெட் விளையாடும் ஆசையோடு வரும் அனைத்து இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு ஆலோசனையை மகேந்திர சிங் தோனி தற்பொழுது வழங்கியுள்ளார்.

- Advertisement -

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வெள்ளி விழாவில் கலந்துகொண்ட மகேந்திர சிங் தோனி

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அந்த வெள்ளி விழாவுக்கு தலைமை விருந்தினராக மகேந்திர சிங் தோனி அழைக்கப்பட்டிருந்தார். அங்கே சென்று விழாவை சிறப்பித்த அவர் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய பொழுது என்னுடைய மாவட்ட அணிக்கு நான் சிறப்பாக விளையாடினேன். அதன் பின்னர் படிப்படியாக இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். நீங்களும் மாவட்ட நிலையிலிருந்து கிரிக்கெட் விளையாட தூங்க வேண்டும்.

- Advertisement -

ஏனென்றால் நீங்கள் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடுவதன் மூலம் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறலாம். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நீங்கள் முடிவு எடுத்துவிட்டு பள்ளியில் விளையாடி அதன் பின்னர் உங்களுடைய சிறந்த ஆட்டத்தை மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர்களில் வெளிப்படுத்தவேண்டும். அதன்பின்னரே உங்களுக்கு மாநில அளவிலான வாய்ப்புகள் வந்து சேரும்.

மாநில அளவில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் ரஞ்சி டிராபி அதன் பின்னர் இந்திய அணியில் நீங்கள் விளையாடலாம். எனவே கிரிக்கெட் விளையாட நீங்கள் முடிவு செய்துவிட்டால் உங்களுடைய எதிர்காலத்தை நீங்கள் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக வடிவமைக்க வேண்டும். அதற்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர்கள் உங்களுக்கு கைகொடுக்கும் என்று எம்எஸ் தோனி கூறியுள்ளார்