முதல் விக்கெட்டே கோலி.. தமிழக கிரிக்கெட் வீரர் அசத்தல் சாதனை.. யார் இந்த மணிமாறன் சித்தார்த்.?

0
1261

ஒரு கிரிக்கெட் வீரருக்கு தான் எடுக்கும் முதல் விக்கெட் எப்பொழுதுமே சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதுவும் விராட் கோலி போன்ற ஒரு நட்சத்திர ஜாம்பவானின் விக்கட்டை எடுக்கும் பொழுது அது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் லக்னோ அணிக்காக விளையாடி வரும் சித்தார்த் அவர்கள்.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. பின்னர் 182 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி மற்றும் டு பிளஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். சுழற் பந்துவீச்சாளர் சித்தார்த் வீசிய முதல் ஓவரில் மூன்று ரன்கள் குவித்த பெங்களூர் அணி, அவர் வீசி இரண்டாவது ஓவரில் பன்னிரண்டு ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் சற்று சுதாரித்துக் கொண்ட சித்தார்த், அவர் வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ஆப்சைடாக வீசப்பட்ட பந்தை விராட் கோலி தூக்கி அடிக்க, அது நேராக படிக்கல்லின் கைகளில் தஞ்சம் அடைந்தது. இது சித்தார்த் அவர்களுக்கு ஐபிஎல்லில் முதல் விக்கெட்டாக, அதுவும் விராட் கோலியின் நட்சத்திர விக்கெட் ஆகவும் அமைந்தது. அசோக் திண்டா, ஆஷிஷ் நெஹ்ரா, அல்பி மோர்கல், செதன்யா நந்தா, டக் பிரேஸ்வெல், ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் மெக்லெனகன், ஹர்பிரீத் பிரார், டெவால்ட் ப்ரீவிஸ் மற்றும் இப்போது சித்தார்த் உட்பட 10 பந்து வீச்சாளர்கள் விராட்டை முதல் ஐபிஎல் விக்கெட்டாகப் பெற்றுள்ளனர்.

யார் இந்த மணிமாறன் சித்தார்த்.?

தமிழ்நாட்டைச் சேர்ந்த சித்தார்த் 2020 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் 2021 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் உறுப்பினராக இருந்தார். அதற்குப் பிறகு அவரது காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கு பெறவில்லை. இருப்பினும் கடந்த ஆண்டு டிஎன்பிஎல் லீகில் கோவை அணிக்காக விளையாடிய இவர் ஒன்பது போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை 5.61 பந்து வீச்சு எக்கானமியில் எடுத்தார். பின்னர் தனது மாநில அணிக்காகவும் டிஎன்பிஎல் தொடர்ந்து சிறப்பாக பங்கு பெற்றதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

2019ஆம் ஆண்டில் தமிழக அணிக்காக சையத் முஸ்தாக் அலி டிராபியில் அறிமுகமாகி அந்த சீசனில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரை பவர் பிளேவில் முதலில் பந்து வீசப் பரிந்துரைத்தவர் தினேஷ் கார்த்திக் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே ஆண்டில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகி ஏழு முதல் தர ஆட்டங்களில் விளையாடி இரண்டு நான்கு விக்கெட்டுகள் உட்பட 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

பின்னர் தனது மாநில அணிக்காக முதல் லிஸ்ட் ஏ போட்டியில் விளையாட இரண்டு வருடங்கள் காத்திருந்து பதினேழு 50 ஓவர் போட்டிகளில் விளையாடி இதுவரை 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. துபாயில் நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்ட இவர், அடிப்படை விலையான 20 லட்சத்திலிருந்து 2.40 கோடி ரூபாய்க்கு இறுதியாக லக்னோ அணி வரை தேர்வு செய்தது. இவரை ஏலத்தில் எடுக்கும் போட்டியில் பெங்களூர் அணியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆளப்போறான் தமிழன்.. ஐபிஎல் 2024ல் பங்குபெறும் 11 தமிழக கிரிக்கெட் வீரர்கள் லிஸ்ட்

தனது ஆரம்ப காலத்தில் இந்தோனேசியாவில் வாழ்ந்து வந்த இவர் தனது 8வது வயதில் இந்தியாவிற்கு வந்த கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். ஒரு கிளப் கிரிக்கெட் வீரரின் மகன், இந்தியாவின் ஆல் ரவுண்டர் இர்பான் பதானைப் போல ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருக்க விரும்பினார். ஆனால் காலம் இவரை தற்போது சுழற் பந்து வீச்சளராக மாற்றியுள்ளது