“800 ரன் எடுப்பிங்கனு கூச்சல் போட்டேன்.. ரூட் என்னை கவுத்திட்டியே” – அலைஸ்டர் குக் புலம்பல்

0
477
Cook

இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் நேற்று மூன்றாவது டெஸ்டில் இரண்டாவது நாள் முடிவில் மிக அதிரடியாக விளையாடி 88 பந்தில் சதம் அடித்து, இங்கிலாந்து அணியை முன்னணிக்கு கொண்டு வந்தார்.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 415 ரன்கள் எடுத்திருக்க, இங்கிலாந்து ராணி நேற்று இரண்டு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் அதிரடியாக எடுத்திருந்தது.

- Advertisement -

போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ராஜ்கோட் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினால், இங்கிலாந்து பாஸ்பால் விளையாடுவதற்கு வசதியாக இருக்கும் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

இதனால் இங்கிலாந்து அணி மூன்றாவது நாளில் மலைபோல் ரன்கள் குவிக்கும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் நம்பி இருந்தார். அவர் இன்று மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து 400 ரன்கள் எடுக்கும் என்றும், மேலும் இங்கிலாந்து 800 ரன்கள் குவிக்கும் என்றும் பேராசையோடு பேசி இருந்தார்.

இப்படியான நிலையில்தான் இந்திய அணி இங்கிலாந்து அணியை அடுத்து 319 ரன்களில் ஆல் அவுட் ஆக்கியது. கடைசி ஐந்து விக்கெட்டுகளை வெறும் 29 ரன்களுக்கு பறித்தது. இங்கிலாந்துக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இங்கிலாந்து அணியின் இந்த பேட்டிங் செயல்பாட்டால் அலைஸ்டர் குக் மிகவும் வெறுப்படைந்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் இங்கிலாந்து 800 ரன்கள் குவிக்கும் என்று கூச்சலிட்டு கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் வெறும் 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இருக்கிறார்கள். ஒரு நல்ல வாய்ப்பையும் சேர்த்து இழந்து விட்டார்கள். இன்று 116 ரன்களுக்கு எட்டு விக்கெட் விழுந்து இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் இப்படி விக்கெட்டுகள் சரிந்தால் எந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற முடியாது. ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியம்.

இதையும் படிங்க : “இவங்கள இப்படிதான்டா தம்பி நடத்தனும்” – ஜெயஸ்வாலுக்கு சேவாக் அனுப்பிய மெசேஜ்

பும்ராவிடம் ஏற்கனவே ஜோ ரூட் தொடர்ந்து ஆட்டம் இழந்து கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அதுவும் ஆட்டத்தின் முதல் அரை மணி நேரத்தில் அப்படி ஒரு ஷாட் விளையாடுவது தவறானது. இங்கிலாந்தில் செய்யலாம் ஆனால் இந்தியாவில் முடியுமா? இங்கிலாந்து மிகவும் மோசமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது” என வருத்தமாகக் கூறியிருக்கிறார்.