ரோகித் பாய் கேப்டன்சி ரொம்ப நல்லா இருந்தது.. இங்க யாரையும் விட டீம்தான் முக்கியம் – ஆகாஷ் மத்வால் பேட்டி

0
313
Akash

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் சொந்த மைதானமான மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று விளையாடியது. இந்த போட்டியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 125 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் மும்பை படுதோல்வியை சந்தித்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியை டிரெண்ட் போல்ட், பர்கர் இருவரும் வேகப் பந்துவீச்சில் பெரிய அளவில் சோதித்தார்கள். இதற்குப் பிறகு வந்த சுழல் பந்துவீச்சாளர் சாகல் தன் பங்குக்கு மூன்று விக்கெட் கைப்பற்றி மொத்தமாக முடித்து வைத்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முதல் மூன்று முக்கிய விக்கெட்டுகள் சீக்கிரத்தில் விழுந்த போதும், நடப்பு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான பேட்டிங் அணுகுமுறையில் வந்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் ஆரம்பத்தில் பொறுமை காட்டி அடுத்து அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 54 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்து, 15.3 ஓவர்களில் அணியை வெல்ல வைத்தார். மூன்றாவது வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

அதே சமயத்தில் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியாக அமைந்தது. 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக வந்த ஹர்திக் பாண்டியா முதல் மூன்று போட்டிகளையும் வென்று இருந்தார். அதே சமயத்தில் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக வந்த ஹர்திக் பாண்டியா முதல் மூன்று போட்டிகளையும் தோற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு பெற்று நான்கு ஓவர்களில் இருபது ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றிய ஆகாஷ் மத்வால் பேசும் பொழுது “ட்ரெஸ்ஸிங் ரூம் சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது. தற்பொழுது ஒரு புதிய கேப்டன் இருக்கிறார். கேப்டனாக இருவருமே வித்தியாசமானவர்கள். ஆனால் ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் விளையாடியது நன்றாக இருந்தது. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை ரசிக்கிறேன். இந்த போட்டியில் கூட நான் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தேன். நான் பும்ரா பாயுடன் பந்து வீச்சு சம்பந்தமாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அணிக்குள் ஏதோ நடப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அப்படி எதுவும் இல்லை சூழல் நன்றாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : மீண்டும் ரோஹித்தை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக்குங்க – மனோஜ் திவாரி தைரியமான பேட்டி

இங்கு முதலில் அணிதான் வருகிறது. தனிப்பட்ட என்னைப் பற்றிய எதுவும் கிடையாது. எங்கள் அணியில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களுடன் தொடர்ந்து போட்டியிட்டு என்னுடைய இடத்தை உறுதி செய்ய வேண்டும். பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் நம்பிக்கையை பெற வேண்டும். இது எங்கள் அணி நல்ல காம்பினேஷன் பெறுவதைப் பற்றியது” என்று கூறி இருக்கிறார்.