இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி, நாளை மறுநாள் ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் துவங்க இருக்கிறது.
இதுவரை நடைபெற்ற மூன்று போட்டியில் ஒன்றை இங்கிலாந்து வென்று இருக்க இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்று தொடரில் தற்போது தற்காலிகமாக முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்றால் தொடரையும் வென்று விடும். அதே சமயத்தில் இங்கிலாந்து அணி தொடரில் இருக்க வேண்டும் என்றால் அடுத்த போட்டியை குறைந்தபட்சம் டிரா ஆவது செய்ய வேண்டும்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு சாதகமான சில விஷயங்கள் நான்காவது டெஸ்ட் போட்டியில் உருவாகி இருக்கின்றன. கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு சில நெருக்கடிகளும் உருவாகியிருக்கிறது.
நான்காவது டெஸ்ட் போட்டிக்கு காயம் சரியாகி மூத்த வீரர் கேஎல்.ராகுல் வந்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவருடைய காயம் சரியாகாத காரணத்தினால் அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.
அதே சமயத்தில் இளம் வீர ரஜத் பட்டிதார் கொடுக்கப்பட்டஇரண்டு வாய்ப்பிலும் சரியாக விளையாடவில்லை. ரவி மூன்றாவது வாய்ப்பு தர வேண்டுமா? இல்லை தேவ்தத் படிக்கல் விளையாட வேண்டுமா? என்கின்ற பெரிய குழப்பம் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு இருக்கிறது.
மேலும் இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடரில் மிகப்பெரிய முதுகெலும்பாக விளங்கிவரும் பேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு நான்காவது டெஸ்டில் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக முகேஷ் குமார் விளையாட வேண்டும் இல்லை என்றால் பெங்கால் அணிக்காக விளையாடும் ஆகாஷ் தீப் விளையாட வேண்டும். அதிகபட்சம் ஆகாஷ் தீப் அறிமுகம் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இதையும் படிங்க : “2008 ஐபிஎல்-ல அதிக சம்பளம் வாங்க.. இப்படி பிளான் பண்ணேன்.. சக்ஸஸ் ஆச்சு” – தோனி மாஸ் தகவல்
மிகவும் சிறிய கிராமத்தில் இருந்து, கடினப்பட்டு உழைத்து பெங்கால் அணிக்கு வந்தவர். மேலும் ஒரு ஆறு மாத இடைவெளியில் தந்தை மற்றும் சகோதரரை இழந்திருப்பவர். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது. 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீச முடிந்த இவர், பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.