சிஎஸ்கே-க்கு எதிரா இந்த பிளேயிங் லெவனோட போங்க.. ஆர்சிபி-க்கு பிளானை கொடுத்த ஆகாஷ் சோப்ரா

0
131
Rcb

2024 ஆம் ஆண்டு 17வது ஐபிஎல் சீசன் துவங்குவதற்கு இன்றைய நாளில் இருந்து நடுவில் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கிறது. மார்ச் 22 ஆம் தேதி துவங்கும் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அல்ஜாரி ஜோசப் 11.50 கோடி, யாஸ் தயால் 5 கோடி, லாக்கி பெர்குசன் 2 கோடி, டாம் கரன் 1.5 கோடி, ஸ்வப்னில் சிங் 20 லட்சம் மற்றும் சவுரவ் சவுகான் 20 லட்சம் ஆகியோரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது. மேலும் 17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி இடம் இருந்து ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனையும் வாங்கி இருக்கிறது.

- Advertisement -

முதல் போட்டியில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகின்ற காரணத்தினால், எப்படியான பிளேயிங் லெவனை ஆர்சிபி அமைக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாக இருந்து வருகிறது. இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா முதல் போட்டிக்கான ஆர்சிபி பிளேயிங் லெவனை வெளியிட்டு இருக்கிறார்.

ஆகாஷ் சோப்ராவின் ஆர்சிபி பிளேயிங் XI

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்த முறை ஆர் சி பி அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்? பாப் டு பிளிசிஸ் கேப்டனாக இருக்கிறார் எனவே அவர் விளையாடுவார். அவருடன் விராட் கோலி விளையாடுவார். மூன்றாவது இடம் யாருக்கு என்று பெரிய கேள்வி இருக்கிறது. நான் பிளேயிங் லெவனை அமைக்கும் பொழுது மூன்றாவது இடத்திற்கு கேமரூன் கிரீனை வைப்பேன்.

மேலும் நான்காவது இடத்திற்கு ரஜத் பட்டிதார், ஐந்தாவது இடத்திற்கு மேக்ஸ்வெல் இருப்பார்கள். ஆறாவது இடத்திற்கு தினேஷ் கார்த்திக் இல்லை அனுஜ் ராவத் இருவரில் ஒருவர். ஆனால் என்னைப் பொறுத்தவரை தினேஷ் கார்த்திக் விளையாட வேண்டும். ஏனென்றால் அவருக்கு இது கடைசி சீசன். மேலும் அவர் பினிஷிங் ரோலில் ஏற்கனவே நன்றாக செயல்பட்டுமிருக்கிறார். எனவே அவருடன் செல்வது நல்லது.

- Advertisement -

ஏழாவது இடத்தில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மனோஜ் பாண்டேஜ், எட்டாவது இடத்தில் லெக் ஸ்பின்னர் கரன் ஷர்மா. மற்ற மூன்று இடங்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் லாக்கி பெர்குசன், ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ்.

இதையும் படிங்க : தன்னம்பிக்கைனா ஸ்டோக்ஸ்தான்.. ஆனா அவரே தோனி கேப்டன்ஷில விளையாட விரும்பினாரு – இயான் மோர்கன் பேச்சு

இந்தப் பிளேயிங் லெவலுக்கு ஒரு பந்துவீச்சு இம்பேக்ட் பிளேயர் தேவைப்பட்டால் வைசாக் விஜயகுமாரை வைத்துக் கொள்ளலாம். இதேபோல் ஒரு பேட்டிங் இம்பேக்ட் பிளேயர் தேவைப்பட்டால் அனுஜ் ராவத் இல்லை தினேஷ் கார்த்திகை வைத்துக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.

பாப் டு பிளிசிஸ், விராட் கோலி, கேமரூன் கிரீன், ரஜத் பட்டிதார், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மனோஜ் பாண்டேஜ், கரன் சர்மா, லாக்கி பெர்குசன் மற்றும் முகமது சிராஜ். இம்பேக்ட் பிளேயர்கள் அனுஜ் ராவத் இல்லை வைசாக் விஜயகுமார்.