இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய அணி ஏற்கனவே மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இந்திய அணி குறித்து ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதலில் நடைபெற்ற டிஎ
20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதில் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கும் நிலையில் கடைசி போட்டி என்பதால் சோதனை முயற்சிகள் செய்யப்படுவது வழக்கம். இதனால் இந்திய பேட்டிங் வரிசையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஐந்தாவது டி20 போட்டி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். அதாவது இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஏற்கனவே செட் செய்யப்பட்டு விட்டதாகவும் இதனால் இந்த சோதனையை முயற்சியும் அவசியம் இல்லை என்ற தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் போது ” இதை ஒரு டெட் ரப்பர் என்று கூறலாம். ஆனால் ஒரு டெட் ரப்பரின் நன்மை என்னவென்றால் நீங்கள் சில பரிசோதனை முயற்சிகளை செய்யலாம். நீங்கள் தொடரை வென்றுள்ளதால் பேட்டிங்கில் சில பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அதற்கான தேவையோ அல்லது வாய்ப்புகளோ இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அபிஷேக்சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக செட் செய்யப்பட்டு விட்டார்கள்.
இதையும் படிங்க:76 ரன் 6 சிக்ஸ்.. சூப்பர் கிங்சை சிதறடித்த கிளாசன்.. பெரிரா அதிரடி வீண்.. தோல்வியிலும் மகிழ்ச்சி அடைந்த ஜேஎஸ்கே.. எஸ்ஏ டி20
அவர்களுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் திலக் வர்மா மற்றும் நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவ் வருகிறார். ரிங்கு சிங் ஐந்தாவது இடத்திலும் அதற்குப் பிறகு ஹர்திக் பாண்டியா மிடில் வரிசையில் ஆறாவது இடத்திலும் களம் இறங்குகிறார். அதற்குப் பிறகு ஆல் ரவுண்டர்களாக சிவம் துபே மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் இருக்கின்றனர். எனவே உங்களது பேட்டிங் வரிசை ஏற்கனவே பலப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதால் எந்த அவசியமும் இல்லை” என்று கூறி இருக்கிறார்