76 ரன் 6 சிக்ஸ்.. சூப்பர் கிங்சை சிதறடித்த கிளாசன்.. பெரிரா அதிரடி வீண்.. தோல்வியிலும் மகிழ்ச்சி அடைந்த ஜேஎஸ்கே.. எஸ்ஏ டி20

0
393

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 29 வது போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதினர்.

இதில் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 11 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

எஸ்ஏ டி 20 கிரிக்கெட் லீக்

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய டர்பன் அணியில் டிகாக் மற்றும் பிரீக் ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு நான்கு ஓவர்களில் 39 ரன்கள் குவித்தது. இதில் டிக்காக் 16 ரன்னில் வெளியேற மற்றொரு தொடக்க வீரர் ப்ரீக் 13 பந்தில் 23 ரன்கள் குவித்து வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய வில்லியம்சன் 20 பந்தில் 22 ரன்கள் குவித்து வெளியேற, ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆனார்.

அதற்குப் பிறகு களம் இறங்கிய மிடில் வரிசை வீரர்களான கிளாசன் மற்றும் மல்டர் ஆகியோர் சிறப்பாக விளையாடி டர்பன் அணியின் ரன்களை வெகுவாக உயர்த்தினார்கள். 47 பந்துகளை எதிர்கொண்ட கிளாசன் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸ் என 161 ஸ்ட்ரைக் ரேட்டில் 76 ரன்கள் குவித்தார். மறுமுனையில் மல்டர் 22 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். இதனால் டர்பன் அணியின் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.

- Advertisement -

சிறப்பான வெற்றி பெற்ற டர்பன் அணி

பந்துவீச்சை பொறுத்தவரை சூப்பர் கிங்ஸ் அணியில் வில் ஜான் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் மழை பெய்த காரணத்தால் 16 ஓவர்களில் 147 ரன்கள் சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சூப்பர் கிங்ஸ் அணியில் எதிர்பார்த்தபடி யாரும் விளையாடவில்லை. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் டூ பிளஸ்சிஸ் 14 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இதையும் படிங்க:நான் ரோகித் கோலி கிட்ட.. எதிர்பார்க்கிற விஷயம் இது மட்டும்தான்.. இதை செஞ்சா போதும் – கோச் கம்பீர் பேட்டி

விக்கெட் கீப்பர் கான்வே 21 ரன்னில் ஆட்டம் இழக்க, அதற்குப் பின்னால் களம் இறங்கிய வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். அதிகபட்சமாக மிடில் வரிசை வீரர் பெரிரா 22 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸ் என 51 ரன்கள் குவித்தார். இதனால் 16 ஓவர்களில் சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே குவித்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட நூர் அகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -