“ஸ்டோக்ஸ் கீழே விளையாடி ஹீரோவா காட்டிக்கிறார்.. முடிஞ்சா மேல வந்து விளையாடுங்க” – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
121
Akash

உலக கிரிக்கெட்டில் பெரிய போட்டிகளில் விளையாடும் வீரர் என சிலர் எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் வழக்கமாக நடக்கும் தொடர்களில் பெரிதாக விளையாட மாட்டார்கள். ஆனால் சில முக்கியமான தொடர்கள் மற்றும் உலகக்கோப்பை போன்றவற்றில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் அப்படியான பெரிய போட்டிகளுக்கான பெரிய வீரராக இருந்து வருகிறார். இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலியும் ஸ்டோக்ஸ் பற்றி இப்படியே குறிப்பிடுவார்.

- Advertisement -

2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, மேலும் அதற்கடுத்து இங்கிலாந்தில் நடைபெற்ற ஆசஸ் கிரிக்கெட் தொடர் என ஸ்டோக்ஸ் தனியா நின்று விளையாடி அணியை வெற்றி பெற வைத்த பெரிய நிகழ்வுகள் அவரது பெயருக்கு பின்னால் இருக்கிறது.

தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் வீரர், ஸ்டோக்ஸ் மேல் வரிசையில் வந்து விளையாடி விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், கீழ் வரிசையில் விளையாடி விமர்சனங்களில் இருந்து தப்பிப்பதோடு, எப்பொழுதாவது நன்றாக விளையாடும் பொழுது ஹீரோவாகவும் மாறிவிடுகிறார் என்றுவிமர்சனம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்வதை பார்க்கும் பொழுது அவர் இந்த பாஸ்பால் திட்டத்திலேயே இல்லை என்பது போல் தெரிகிறது. அவர் பந்து வீச வருவதும் கிடையாது. மேலும் முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் பென் டக்கெட்டுக்கு பிறகு இவர்தான் இடது கை பேட்ஸ்மேன். இப்படி இருக்கும் பொழுது இவர் ஏன் மேலே வந்து விளையாடக் கூடாது?

- Advertisement -

காளையை அதன் கொம்புகளை பிடித்து அடக்க வேண்டும். ஒரு கேப்டனாக மேலே வந்து இவர் விளையாட வேண்டும். ஆனால் இவர் அப்படி செய்யாமல் வாலுடன் சேர்ந்து விளையாடுகிறார். அதிலும் சில நேரங்களில் 30 பந்துகளுக்கு 10 ரன்கள்தான் எடுக்கிறார்.

இவர் கீழ் வரிசை பேட்ஸ்மேன்னுடன் இணைந்து விளையாடி ரன் எடுக்கும் பொழுது ஹீரோவாகி விடுகிறார். ஆனால் இவர் மேல் வரிசையில் வந்து விளையாடுவது குறித்து உரையாடல்கள் ஆரம்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க : “டெஸ்ட் விளையாடற மனநிலை இல்லை.. இந்திய பேட்ஸ்மேன்கள் இதை செய்தால்தான் ரன் வரும்” – கவாஸ்கர் அறிவுரை

இவர் நான்கு இல்லை ஐந்தாம் இடத்தில் வந்து போட்டியை கட்டுப்படுத்துகிறார் என்று தான் இவர் குறித்து பேச வேண்டும். இவர் அந்த இடத்தில் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தால் பாராட்டப்படுவார். ஒருவேளை ஆட்டம் இழந்து வெளியேறினால் விமர்சிக்கப்படுவார். பென் ஸ்டோக்ஸ் விமர்சனங்களை எதிர்கொள்ள வர வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.