இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 37 வயதாகிறது. இதனால் அவர் இன்னும் எத்தனை காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முதல் படியாக அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் கில் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் சதம் சதமாக அடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் அனில் கும்ப்ளே ஒரு புதிய ஐடியா ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.
பும்ராவை கேப்டனாக போடுங்க:
இது குறித்து பேசிய அவர், “கில் ஏற்கனவே இந்திய அணியில் தலைமை குழு பொறுப்பில் இருக்கின்றார். அவருக்கு நிச்சயம், ஒருநாள் கேப்டன் பதவி வந்து சேரும். ஆனால் ரோகித் சர்மா உடனடியாக கேப்டன் பதவி விட்டு சென்று விட்டால் பும்ரா தான் அந்தப் பதவிக்கு வர வேண்டும். ஏனென்றால் பும்ரா தான் ஆட்டோமேட்டிக் சாய்ஸாக இருப்பார்”.
“ஏற்கனவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்படும் நிலையில் ஒருநாள் போட்டிக்கும் அவரையே கேப்டனாக நியமிக்க வேண்டும். ஏனென்றால் நாம் முன்பு போல் ஒரு நாள் கிரிக்கெட்டில் பெரிய அளவு விளையாடுவது கிடையாது. அடுத்த உலக கோப்பை 2027 ஆம் ஆண்டு தான் நடைபெறுகிறது”.
பும்ரா தான் சரியான சாய்ஸ்:
“2023 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை நாம் பெரிய அளவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது கிடையாது. நாம் தற்போது அதிகமாக டி20 கிரிக்கெட்டில் தான் கவனம் செலுத்துகின்றோம். அங்கு சூரியகுமார் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டை நீங்கள் எடுத்துக் கொண்டால் பும்ராவை கேப்டனாக நியமிங்கள்”.
இதையும் படிங்க: கோலிக்கு ரன் அடிக்காததை விட.. இத பத்தி தான் ரொம்ப கவலை.. நல்லாவே தெரியுது – ராபின் உத்தப்பா பேட்டி
“அவரை பாதுகாக்க வேண்டும். இந்திய கிரிக்கெட்டில் விலைமதிப்பு மிக்க வீரராக அவர் விளங்குகிறார். பும்ராவை நாம் சரியாக பயன்படுத்தி முக்கிய தொடர்களில் மட்டும் விளையாட வைக்க வேண்டும். பும்ரா தான் இயல்பான சாய்ஸாக இருப்பார். அவருக்கு பிறகு தான் கில் கேப்டன் பொறுப்புக்கு வரவேண்டும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இதேபோன்று 2027 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால் அதற்கான அணியை தற்போது இருந்தே தயார் செய்ய வேண்டும்” என்றும் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.






