நடராஜன் இருந்தா சிஎஸ்கேவுக்கு எடுத்ததும் செக் வைக்கலாம்.. ருதுராஜுக்கு இந்த பிரச்சனை இருக்கு – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

0
113
Ruturaj

இன்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்க இருக்கிறது. பேட்டிங்கில் அதிரடி காட்டும் வீரர்கள் ஹைதராபாத் அணியில் இருப்பதால், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

மேலும் சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் கடைசி ஆட்டத்தில் சிறிய அணியான டெல்லி கேப்பிட்டல் அணியிடம் தோல்வி அடைந்து வருகிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்து வருகிறது. எனவே இரண்டு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப கடுமையாக போராடும்.

- Advertisement -

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் மிக சுமாரான பேட்டிங் செயல்பாட்டையே வெளிப்படுத்துகிறார். மேலும் மூன்று போட்டிகளிலும் யாஸ் தயால், ஸ்பென்சர் ஜான்சன், கலீல் அகமது என மூன்று இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார். மீண்டும் அவருக்கு இந்த பிரச்சனை ஆரம்பமாகி இருக்கிறது.

இது குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ஹைதராபாத் அணிக்கு எதிராக ருத்ராஜ் நல்ல நம்பர்களை வைத்திருக்கிறார். எனவே இந்த போட்டியில் அவர் முக்கியமான வீரராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் இந்த அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார் மேலும் அரைசதங்கள் நடித்திருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களிடம் ஆட்டம் இழந்து வருகிறார்.

இப்படியான சூழ்நிலையில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஹைதராபாத்தில் நடராஜன் இன்றைய போட்டிக்கு கிடைப்பாரா? என்பது தெரியவில்லை. இன்னொரு இடதுகை வேகப் பந்துவீச்சாளர் மார்க்கோ யான்சன் விளையாடுவதை நான் பார்க்கவில்லை. மேலும் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் ருதுராஜ் ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். அவர் நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால் அதற்கேற்ற ரன்கள்தான் வரவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : 11 பந்தில் அரை சதம்.. பஞ்சாப் கிங்ஸ் என்னை எக்ஸ்ட்ரா ஒருநாள் இருக்க சொன்னாங்க – அசுடோஸ் சர்மா பேட்டி

மேலும் இந்த போட்டியில் இன்னொரு வீரராக நான் ரவீந்திர ஜடேஜாவை பார்க்கிறேன். ஹைதராபாத் அணியில் இருக்கும் டிராவிஸ் ஹெட்டுக்கு இடதுகை சுழல் பந்துவீச்சுக்கு எதிராக நல்ல புள்ளி விவரங்கள் இல்லை. இதேபோல் மார்க்ரம் மற்றும் கிளாசன் ஆகியோரை இடதுகை சுழல் பந்துவீச்சுக்கு எதிராக சிக்க வைக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.