11 பந்தில் அரை சதம்.. பஞ்சாப் கிங்ஸ் என்னை எக்ஸ்ட்ரா ஒருநாள் இருக்க சொன்னாங்க – அசுடோஸ் சர்மா பேட்டி

0
35
Ipl2024

நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி குஜராத் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்த பொழுது ஷஷான்க் சிங் மற்றும் அசுடோஸ் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணியை வெல்ல வைத்தார்கள். இதில் அசுடோஸ் சர்மா ஐபிஎல் தொடரில் நேற்று முதல்முறையாக அறிமுகம் ஆனார். மத்திய பிரதேஷ் மாநில அணிக்காக விளையாடி தற்போது இவர் ரயில்வே அணிக்காக விளையாடுகிறார். மேலும் இந்திய உள்நாட்டு டி20 கிரிக்கெட்டில் 11 பந்துகளில் அரை சதம் அடித்து யுவராஜ் சிங் சாதனையை உடைத்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயம் அடைந்த லிவிங்ஸ்டன் இடம் பெறவில்லை. அவருடைய இடத்தில் சிக்கந்தர் ராசா விளையாடினார். மேலும் இந்தத் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீசாத ராகுல் சகர் இம்பேக்ட் பிளேயர் இடத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்த இடத்தில் இம்பேக்ட் பிளேயராக வந்த அசுடோஸ் சர்மா கடைசிக்கட்டத்தில் 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

நேற்றைய போட்டி முடிந்தபின் ஷஷான்க் சிங் உடன் பேசிய அசுடோஸ் சர்மா “நான் பஞ்சாப் கிங்ஸ் டிரையல் முகாமில் கலந்து கொண்டேன். அதில் நான் எல்லாவற்றையும் சிறப்பாகவே செய்திருந்தேன். இதற்கு அடுத்து நான் வேறு ஒரு ஐபிஎல் அணியின டிரையலுக்கு செல்ல வேண்டி இருந்தது.

எனவே அன்றைய இரவு விமானத்திற்கு புக் செய்தேன். ஆனால் திடீரென பணி நிர்வாகம் அழைத்து ஒரு நாள் மட்டும் இருக்க சொன்னார்கள். ஒரு நாள் இருக்க சொல்கிறார்கள் என்றால் ஏதோ நல்ல விஷயமாக என்று நினைத்து, நான் இன்னொரு ஐபிஎல் அணியின் டிரையலுக்கு செல்வதை தவிர்த்தேன். இதனால்தான் நான் தற்பொழுது பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க: தோனிக்கு எதிரா கண்டிப்பா நான் அத பண்ண மாட்டேன் – சிஎஸ்கே போட்டிக்கு முன் பேட் கம்மின்ஸ் பேட்டி

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் என்னிடம் ‘நீ வெறும் பேட்டை சுத்தக்கூடிய ஸ்லாகர் கிடையாது. உன்னிடம் நல்ல சில அருமையான கிரிக்கெட் ஷாட்கள் இருக்கிறது’ என்று கூறினார். அவரது அந்த அறிவுரை நான் ரஞ்சி டிராபியில் அறிமுகப் போட்டியில் சதம் அடிப்பதற்கு உதவியத. அவருடைய அந்த சிறிய கருத்து எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது” என்று கூறியிருக்கிறார்.