“சனத் ஜெயசூர்யாகிட்ட விராட் கோலி செஞ்ச அந்த சம்பவம்.. மிரண்டு போயிட்டேன்” – ஹர்பஜன் சிங் பேச்சு

0
222
Virat

இந்தியா வழி வழியாக நட்சத்திர பேட்ஸ்மேன்களை கொண்ட கிரிக்கெட் நாடாக இருந்து வந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் முகமாய் இருந்து வழிநடத்தி இருக்கிறார்.

இந்த வகையில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய கிரிக்கெட்டை வழிநடத்தக்கூடிய பேட்ஸ்மேனாக விராட் கோலி இருந்து வருகிறார். இன்று இந்திய கிரிக்கெட்டின் முகம் விராட் கோலிதான்.

- Advertisement -

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியை வழிநடத்தி இளம் வீரராக உலக கோப்பையை வென்ற விராட் கோலி, 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆச்சரியப்படுத்தும் விதமாக வாங்கப்பட்டார். ஏனென்றால் அவரின் சொந்த மாநிலமான டெல்லி இவரை நம்பி வாங்கவில்லை.

அங்கிருந்து மெல்ல மெல்ல உயர ஆரம்பித்தவர் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் தனித்த சாதனைகள் பல படைப்பு, இன்றைய அளவில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடும் ஒரே பேட்ஸ்மேன் என்கின்ற பெரிய நட்சத்திர அந்தஸ்தில் இருக்கிறார். விராட் கோலி குறித்து ஹர்பஜன் சிங் இர்ஃபான் பதான் மற்றும் பத்ரிநாத் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

ஹர்பஜன் சிங் கூறும்பொழுது ” ஐபிஎல் 2008 ஆம் ஆண்டு ஏலத்திற்கு முன்பாக, லால்சந்த் ராஜ்புத் என்னிடம் அண்டர் 19 உலக கோப்பையை வென்ற சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு பையன் இருக்கிறான் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நான் முதல் முறையாக வந்து வழி நடத்திய போட்டியில், சனத் ஜெயசூர்யாவின் பந்துவீச்சில் இறங்கி வந்து அச்சமே இல்லாமல் அவரது தலைக்கு மேல் விராட் கோலி அடித்தார். அவர் அப்பொழுதே இப்படித்தான் இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.

இர்பான் பதான் கூறும்பொழுது “அவர் எல்லா விஷயத்திலும் எப்பொழுதும் தலைப்பு செய்தியில் இருந்தார். ஆனாலும் அவர் கிரிக்கெட்டை ஒருநாளும் ஓரம் கட்டியது கிடையாது. அவர் விளையாட்டுப் பெற்ற வெற்றி என்பது, அவர் விளையாட்டில் காட்டிய அர்ப்பணிப்பு குறித்து உணர்த்துகிறது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: “2008 முதல் ஐபிஎல் சிஎஸ்கே.. எனக்கு இந்த 5 பேர்தான் பெரிய சவாலா இருந்தாங்க” – தோனி பேட்டி

தமிழக வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் பொழுது “அவர் தமிழக அன்னிக்கு எதிராக உள்நாட்டு போட்டியில் அறிமுகமான பொழுது நான் தான் தமிழக அணியின் கேப்டனாக இருந்தேன். அவர் எப்பொழுதும் சிறந்தவராக இருக்க விரும்பினார். தானே முன்னின்று களம் இறங்கி எதையும் சமாளிக்க விரும்பினார்” என்று கூறியிருக்கிறார்