ஐபிஎல் தொடரில் போட்டி தன்மையை அதிகரிப்பதற்காகவும் பார்வையாளர்களுக்கு சுவாரசியத்தை கூட்டுவதற்காகவும் நிறைய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. இதில் ரோகித் சர்மா எதிர்ப்பு தெரிவித்த ஒரு மாற்றத்திற்கு ஆகாஷ் சோப்ரா ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
தற்போது ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி இருந்து வருகிறது. இதன்மூலம் ஒரு அணி பிளேயிங் லெவனில் இல்லாத பவுலர் அல்லது பேட்மேன் என யாரையாவது ஒருமுறை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் போட்டித் தன்மை அதிகரிக்கும் என ஐபிஎல் நிர்வாகக் குழு கருதுகிறது.
இப்படி ஒரு பேட்ஸ்மேன் அல்லது ஒரு பவுலர் கூடுதலாக ஒரு அணிக்கு கிடைக்கின்ற காரணத்தினால் ஆல் கவுண்டர்கள் தேவை ஐபிஎல் தொடரில் குறைகிறது. எனவே இந்திய கிரிக்கெட்டில் அடுத்தடுத்து உருவாகும் வீரர்கள் பேட்டிங் அல்லது பந்து வீச்சு என ஏதாவது ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். இதனால் இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் உருவாவது தடுக்கப்படும் என ரோகித் சர்மா இந்த விதியை நீக்க சொல்லி கேட்டிருந்தார்.
தற்போது இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “இம்பேக்ட் பிளேயர் விதி இந்திய வீரர் அல்லது வெளிநாட்டு வீரர் என இருவருக்கும் பயன்படுத்தப்பட்டால் உண்மையில் ஐபிஎல் தொடரின் தரம் மிக அதிகமாக உயர்ந்திருக்கும். வெளியில் அமர்ந்திருக்கும் பல வெளிநாட்டு வீரர்கள் விளையாடியிருப்பார்கள். மேலும் பிளேயிங் லெவனில் அவர்கள் ஐந்து பேர் இருந்திருப்பார்கள். ஆனால் இது இந்திய வீரர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது.
குறிப்பாக ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயராக பெரும்பாலும் இந்திய அணிக்காக விளையாடாத வீரர்கள் மட்டுமே இடம் பெறுகிறார்கள். இப்படி இம்பேக்ட் பிளேயராக வரக்கூடியவர்கள் எந்த ஒரு ஐபிஎல் அணியிலும் பிளேயிங் லெவனில் இடம்பெறவே மாட்டார்கள். எனவே இந்த விதியின் மூலமாகவே இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
இதையும் படிங்க : 198 ஏக்கர்.. கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்.. எக்கச்சக்க சிறப்பு வசதிகள் – முழு தகவல்கள்
தற்போது பத்து ஐபிஎல் அணிகளிலும் 10 இந்திய இளம் வீரர்களுக்கு இம்பேக்ட் பிளேயர் மூலமாக விளையாடும் வாய்ப்பு உருவாகிறது. இல்லையென்றால் இந்த பத்து வீரர்களும் நிச்சயமாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது. இது இந்திய இளம் வீரர்களுக்கு நல்ல முறையில் பயன்படுகிறது. எனவே ஆல் ரவுண்டர்கள் தனியாக உருவாக வேண்டும். மற்றபடி ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி நீடிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.