198 ஏக்கர்.. கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்.. எக்கச்சக்க சிறப்பு வசதிகள் – முழு தகவல்கள்

0
483
Kovai

தற்போது உலகத்திலேயே அதிக ரசிகர்கள் அமரும் வகையில் ஒரு லட்சம் இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் மைதானமாக குஜராத் அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது. இந்த நிலையில் இதை விட அதிக இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் மைதானம் தமிழ்நாட்டில் கோவை மாநகரத்தில் கட்டப்பட இருப்பதாக செய்திகள் கூறுகிறது.

தமிழ்நாடு அரசு கோவையில் குஜராத் அகமதாபாத் மைதானத்தை தாண்டி உலகிலேயே அதிக கிரிக்கெட் ரசிகர்கள் அமரும் வகையிலான மிகப்பெரிய மைதானத்தை கட்ட திட்ட அறிக்கைக்கு ஏலதாரர்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது. மேலும் முன் யோசனையாக இதில் சர்வதேச தரத்தில் பல சிறப்பு வாய்ந்த வசதிகளும் கொண்டுவரப்பட இருக்கின்றன.

- Advertisement -

இதற்காக தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை எம்ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம், மற்றும் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம், மேலும் இங்கிலாந்து லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த மைதானம் சேலம் மற்றும் கொச்சியை இணைக்கும் என்ஹெச் 544 தேசிய நெடுஞ்சாலையில், கோவை மாநகரில் இருந்து 16 கிலோமீட்டர்களுக்கு வெளியே அமைய இருக்கிறது. மேலும் இதற்காக மாநில சிறை துறையிடம் இருக்கும் 200 ஏக்கர் நிலத்தில் 198 ஏக்கர் நிலம் மைதானத்தை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட இருக்கிறது.

மேலும் அமையவிருக்கும் இந்த மைதானத்தில் உறுப்பினர்கள், விஐபிகள், கார்ப்பரேட் அரங்குகள், ஒளிபரப்பு துறைக்கான வசதிகள், மேலும் வீரர்களுக்கான அதிஉயர் நவீனமான ஓய்வறைகள், மேலும் அவர்களுக்கான உணவகங்கள், பார்வையாளர் மாடங்கள், பார்வையாளர்களுக்கான உணவகங்கள், கிரிக்கெட் காட்சியகங்கள் ஆகியவை ஐந்து நட்சத்திர தரத்தில் அமைக்கப்படுகின்றது.

- Advertisement -

வீரர்கள் பயிற்சி செய்வதற்கு உட்புற பயிற்சி அரங்குகள், மேலும் இதே போல உள்ளரங்கு பீல்டிங் பயிற்சி மையங்கள், ஆடுகளத் தயாரிப்பு பயிற்சி, விரிவுரை அரங்குகள் மற்றும் உயர் செயல்திறன் அரங்குகள் அமைய வேண்டும் என அறிவுறுத்தல் சொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் மெகா ஏலத்தில் RTM முறைதான் அநியாயமானது.. இதுதான் காரணம் – அஸ்வின் விளக்கமான பதில்

இத்துடன் வீரர்களுக்கான தனி உணவகங்கள், ஸ்பா, தங்குமிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சத்திற்கான ஏற்பாடுகள் என பல சிறப்பு வசதிகள் எங்கும் இல்லாதபடிஉருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது இது எல்லாவற்றுக்கும் ஏலதார்ர்களுக்கு அழைப்பும், மேலும் திட்ட அறிக்கை தயாரிக்கும், அதற்கான அறிவுறுத்தல்களும் ஆரம்பித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானம் கட்டி முடிக்கப்படும் பொழுது சர்வதேச போட்டிகள் மட்டும் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் இருந்து பாதி கோவைக்கு இடம்மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!