“உள்நாட்டு தொடரில் விளையாடுங்க.. இல்லனா ஐபிஎல் சம்பளமும் வராது” – முன்னாள் ஓபனர் பேச்சு

0
142
Deepak

தற்பொழுது உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடாத இந்திய வீரர்கள் மீது பிசிசிஐ மிகுந்த கண்டிப்பை காட்டி வருகிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல ஆரோக்கியமான விஷயம் என வெளியில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் கருதுகிறார்கள்.

இந்திய அணியின் ஒப்பந்தத்தை பெற்ற அல்லது பெறாத வீரர்கள் யாராக இருந்தாலும், காயம் இல்லாமல் இருந்தால், மேலும் இந்திய அணிக்காக விளையாடாமல் இருந்தால், கட்டாயம் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ உறுதியாக கூறியிருக்கிறது.

- Advertisement -

இப்படி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடாமல் இருப்பதற்கான காரணமாக, ஐபிஎல் தொடருக்கு காயம் இல்லாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள நினைக்கிறார்கள் என பிசிசிஐ நினைக்கிறது.

எனவே இதன் காரணமாக இந்திய அணிக்கு தேர்வாகாமல் போவது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடரில் விளையாடுவதிலும் எதிர்காலத்தில் சிக்கல்கள் வரும் என பிசிசிஐ மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறது. எனவே வீரர்கள் கட்டாயம் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டியது அவசியமாகிறது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” பிசிசிஐ உங்களுக்கு சம்பள காண்ட்ராக்ட் கொடுத்து இருந்தால், நீங்கள் காயமடையாமல் இருந்தால் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுங்கள். ஏனென்றால் உங்களை அங்கிருந்து தான் அவர்களால் மீண்டும் தேர்வு செய்ய முடியும். என்னை பொறுத்தவரையில் இது சரியான முடிவு. முன்பே இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

- Advertisement -

இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது. குறிப்பாக இந்திய இளம் வீரர்கள் காயம் எதுவும் இல்லாமல், அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை தவிர்த்தால், ஐபிஎல் ஒப்பந்தங்களும் பாதிக்கப்படலாம் என பிசிசிஐ பேசியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது விஷயங்கள் மாறி இருப்பது நல்லது.

இதையும் படிங்க : “சதம் அடித்தும் நீக்கப்பட்டேன்.. தோனி பதில் சொல்லியே ஆகனும்” – மனோஜ் திவாரி பரபரப்பு பேட்டி

கடந்த சில காலமாக வீரர்கள் எதாவது காயம் என்று சொல்லி விளையாடுவதை தவிர்க்கிறார்கள். இது குறித்து புதிய தேர்வுக்குழு நிச்சயம் பிசிசிஐ நிர்வாகத்துடன் பேசி இருக்கும்.எனவே நடவடிக்கை மிக வேகமாக எடுக்கப்பட்டு வருகிறது. இது நல்ல விஷயம் எனக் கூறி இருக்கிறார்.