இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையில் முதல்முறையாக இழந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய நிர்வாகம் தவறவிட்ட வீரர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாகவே ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனெனில் இந்திய அணியின் முதல் பேட்டிங் முதல் ஏழாவது பேட்டிங் வரிசை வரை விக்கட்டை நிலைத்து நின்று தற்காத்து கொள்ளாமல் அதிரடியாக விளையாடுவதையே வழக்கமாக்கி கொண்டு வருகின்றனர். இது இந்திய அணிக்கு வெற்றி பெற்று தந்தாலும் தோல்வியடையும் நேரத்தில் அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி டிராவுக்கு கொண்டு வரும் தற்காப்பு வீரர்கள் இந்திய அணியில் இல்லை.
இந்திய அணியில் சிறந்த டெஸ்ட் வீரர்களாக கருதப்படும் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் போதிய பேட்டிங் ஃபார்ம் இல்லாத காரணத்தால் அணியில் இருந்து விலக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த சூழ்நிலையில் இந்திய நிர்வாகம் புஜாராவை மிஸ் செய்கிறது என்றும், அவர் ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் இக்கட்டான சூழ்நிலையில் விக்கட்டை காப்பாற்றி எதிரணியின் வேகத்தை குறைப்பார் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “புஜாராவை இந்த சூழ்நிலையில் மிஸ் செய்கிறோமா என்றால் உண்மையில் இது ஒரு பெரிய கேள்விதான். ஒரு வீரராக அவர் இவ்வளவு ரன்கள் அடிக்கிறார் என்றால், மற்றவர்களும் அதே அளவில் ரன்கள் அடிக்கிறார்கள் என்று கூறலாம். ஆனால் இந்த சூழ்நிலையில் புஜாரா மற்றும் ரகானே நிச்சயமாக மிஸ் செய்கிறோம் என்று தான் கூறுவேன்.
இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டை இப்படி ஆடறது பிடிக்கல.. எனக்கு அப்பவே சோர்வாதான் இருக்கும் – தோனி பேட்டி
தற்போது கில், பண்ட் இன்று விளையாட ஆரம்பித்த காலகட்டத்தில் நிறைய விஷயங்கள் அணியில் மாறிவிட்டன. மாற்றம் என்பது இயற்கைதான். ஆனால் புஜாரா செய்ததை தற்போது இருப்பவர்களில் யாரும் அதனை செய்வதில்லை. இப்போதுள்ளவர்களில் ஆக்ரோஷமான ஒரு வகையான பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடுவதால் இது டிராவிற்கு வேலை செய்வதில்லை. புஜாரா ஒரு தற்காப்பு கிரிக்கெட். இந்த வகையான பிராண்ட் கிரிக்கெட்டில் கவர்ச்சி இருக்காது. தனது கடின உழைப்பினால் காலை முதல் மாலை வரை விக்கெட்டை தற்காத்துக் கொள்ளும் இந்த வகையைதான் இந்தியா மிஸ் செய்கிறது” என்று கூறி இருக்கிறார்.