டெஸ்ட் கிரிக்கெட்டை இப்படி ஆடறது பிடிக்கல.. எனக்கு அப்பவே சோர்வாதான் இருக்கும் – தோனி பேட்டி

0
756
Dhoni

இங்கிலாந்து அணி அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பாஸ்பால் முறை குறித்து தோனி தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக எல்லா அணிகளும் விளையாட ஆரம்பித்திருக்கின்றன. முன்பு ஒரு அணியில் ஏதாவது ஒரு வீரர் அதிரடியாக விளையாடுவார். இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாட ஆரம்பித்த பிறகு உலக டெஸ்ட் கிரிக்கெட் மாற ஆரம்பித்திருக்கிறது.

- Advertisement -

கண் முன்னால் கிரிக்கெட் மாற்றம் அடைந்திருக்கிறது

இது குறித்து பேசி இருக்கும் தோனி கூறும் பொழுது “நீங்கள் விரும்பும் கிரிக்கெட் விளையாட்டுக்கு நீங்கள் எந்த காலத்தையும் கொடுக்கலாம். நாங்கள் பார்த்து கிரிக்கெட் நிறைய மாற்றம் அடைந்து வளர்ச்சி அடைந்திருக்கிறது. தற்போது கிரிக்கெட் விளையாடும் முறை வித்தியாசமாக இருக்கிறது. முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் போதும் என்கின்ற ஸ்கோர் தற்பொழுது டி20 கிரிக்கெட்டுக்கு போடுவதில்லை”

“அதிரடியாக விளையாடும் முறைக்கு பாஸ்பால் என்பது போல ஏதாவது ஒரு பெயரை கொடுக்கிறீர்கள். அதனால் அது சுவாரசியமாக மாறுகிறது. ஏனென்றால் நீங்கள் அதுகுறித்து அதிகம் பேசுகிறீர்கள். ஆனால் நாள் முடிவில் அது கிரிக்கெட் விளையாடுவதற்கான ஒரு வழி. சிலர் ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாட விரும்புகிறார்கள் சிலர் பாரம்பரியமான முறையில் விளையாடுகிறார்கள்”

- Advertisement -

எனக்கு இதுதான் மிகவும் கடினமான நேரம்

“எனக்கு ஒரு டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் மிகவும் கடினமான நேரமாக இருக்கும். அதாவது ஒரு டெஸ்ட் போட்டியில் 100% டிரா ஆகும் என்று முடிவான ஐந்தாவது நாள். அந்த நேரத்தில் எந்த முடிவும் இல்லாமல் போவது மிகவும் சோர்வான ஒன்றாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்கள் இருவருமே தங்கள் வழியில் விளையாடுவார்கள், ஆனால் ஆட்டத்தில் மட்டும் எந்த முடிவும் வராது”

இதையும் படிங்க : பிசிசிஐ செய்த அந்த வேலை.. வீரர்களின் தன்னம்பிக்கை ஒரு வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிச்சிடுச்சு – ஹர்பஜன் சிங் விமர்சனம்

“நாங்கள் டெஸ்டில் ஐந்து நாட்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம். காலை 9:30 மணி ஆரம்பித்து மாலை 4:30 மணி அளவில் முடிகிறது. சில நேரம் 5 மணி வரையும் நீளும். இப்படி ஐந்து நாட்களுக்குப் பிறகும் ஒரு போட்டியில் முடிவு கிடைக்காது என்றால் யோசித்துப் பாருங்கள். இது விளையாட்டுக்கு நல்லது கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -