“ஹர்திக் பாண்டியா மேல ஏன் குறியா இருக்கிங்க.. அவர் தப்பு செய்யல இத பாருங்க” – இந்திய முன்னாள் வீரர் விளக்கம்

0
76
Hardik

இந்திய வீரர்களில் யாரெல்லாம் காயம் இல்லாமலும், இந்திய அணிக்கு தேர்வாகாமலும் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் கட்டாயம் தங்கள் மாநில அணிக்காக உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கண்டிப்புடன் கூறி இருக்கிறது.

இதை மீறக்கூடிய வீரர்கள் இந்திய அணியின் தேர்வுக்கு பரிசீலனை செய்யப்பட மாட்டார்கள் என்றும், எதிர்காலத்தில் அவர்கள் ஐபிஎல் உரிமம் கூட பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய அணியின் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷாந்த் கிஷான் ஆகியோர் சம்பள ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டு அதிரடி காட்டப்பட்டு இருக்கிறார்கள். இதனால் மற்ற வீரர்களுக்கு ஒரு பயம் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இவர்கள் இருவரைப் போலவே ஹர்திக் பாண்டியாவையும் கேள்வி கேட்க முடியுமா? அவரும் இந்த வரையறைக்குள் வருகிறாரா? அப்படி வரவில்லை என்றால் இந்த சட்ட திட்டம் எதற்கும் உதவாது என்று இர்பான் பதான் கூறியிருந்தான்.

இந்த நிலையில் அவருக்கு பதிலளிப்பது போல பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ஹர்திக் பாண்டியா மீதான இந்த கேள்விக்கு விடை எளிதானது. அவர் தவறு செய்யவில்லை என்றால் அவர் எதற்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் சிவப்பு பந்து கிரிக்கெட் தற்பொழுது விளையாடுவது இல்லை. அவருக்கு அது குறித்து லட்சியம் ஏதும் கிடையாது. ஆனால் இதை அவர் வெளியில் சொல்லவில்லை. உண்மை என்னவென்றால் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு கிடைப்பதில்லை.

- Advertisement -

எனவே உங்களை யாரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆடிசன் செய்யவில்லை என்றால், நீங்கள் உள்நாட்டு சிவப்பு பந்து தொடர்களில் விளையாடவில்லை என்றால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். உங்களால் டெஸ்ட் போட்டியில் அத்தனை ஓவர்கள் வீசுவதற்கான உடல் வலிமை இல்லாத போது, நீங்கள் தேவையில்லாமல் நான்கு நாட்கள் போட்டியில் விளையாட போவது இல்லை. அப்படிஏன் விளையாட வேண்டும்?

இதில் அட்டவணையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷான் இவர்களோடு ஏன் ஹர்திக் பாண்டியா வைக்கப்படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஹர்திக் பாண்டியா அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் உலக கோப்பையில் விளையாடி காயமடைந்தார்.

இதையும் படிங்க : “நாளை தமிழ்நாடு அணிக்கு எதிரா ஸ்ரேயாஸ் வரார்.. எல்லாத்தையும் அவரே பாத்துக்குவார்” – ரகானே பேட்டி

சையத் முஸ்டாக் அலி டிராபி நவம்பரில் முடிவடைந்தது. அப்போது அவர் உலகக் கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்தார். விஜய் ஹசாரே டிராபியில் பரோடா அணி கடைசியாக டிசம்பர் 5ஆம் தேதி விளையாடியது. அப்போது அவர் காயம்பட்டு உடல் நலமில்லாமல் இருந்தார். இந்த நேரத்தில் அவர் எந்தவிதமான பயிற்சிகளிலும் ஈடுபடவில்லை. அவர் காயத்தில் இருந்து தற்போதுதான் திரும்பி வந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.