“ஓய்வு தேவைனா ஐபிஎல் தொடர்ல எடுங்க.. இங்கிலாந்து தொடர்ல எடுக்காதிங்க” – இந்திய வீரர் பற்றி ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
108
Bumrah

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி வருகின்ற 13-ஆம் தேதி குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற இருக்கிறது.

நடந்து முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவருடைய செயல்பாடுதான் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமான வித்தியாசமாக அமைந்தது. அவரால்தான் தொடரை சமன் செய்யவும் முடிந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் தற்பொழுது முக்கிய வீரர்களான விராட் கோலி கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இல்லாமல் இந்திய அணி இளம் வீரர்களை உள்ளடக்கி கொஞ்சம் பலவீனமாக காணப்படுகிறது.

ஐபிஎல் தொடர் முடிந்து நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து, ஜஸ்பிரித் பும்ராவுக்கு மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு கொடுக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” பும்ரா ஓய்வு எடுக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் அவருக்கு ஓய்வு கொடுக்கக்கூடாது. இந்தக் கருத்தில் என்னுடன் நிறைய பேர் உடன்படவில்லை. அவர் இந்திய கிரிக்கெட்டின் சொத்து எனவே பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள்.

- Advertisement -

நான் இதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு வீரர் விளையாடத்தான் வேண்டும். ஏனென்றால் அவர் அணிக்கு மிகவும் தேவையான முழுமையான வீரர். அவர் இல்லாமல் விளையாடுவது சிரமமான ஒன்று. உங்களுக்கு ஓய்வு தேவை என்றால் நீங்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வு எடுக்கலாம்.

இந்தியாவில் உலகக்கோப்பை முடிந்து அவர் அதற்கு மேல் ஒரு மாதத்திற்கு மேல் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடினார். அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இரண்டரை நாட்களில் முடிந்தது.

அங்கிருந்து வந்து இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். இரண்டு டெஸ்ட் போட்டியிலும் சேர்த்து அவர் 60 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி இருக்கிறார். இதனால் அவர் விளையாட வேண்டும் என்று நான் கூறுவேன்.

இதையும் படிங்க : 2008 முதல் டெஸ்ட் தொடர்கள் இப்படி நடக்கக்கூடாது..  எம்சிசி ஐசிசிக்கு அதிரடி பரிந்துரை

உங்களுடைய பணிச்சுமையை நீங்கள் நிர்வகிக்க வேண்டும் என்றால், தற்காலிகமாக தற்பொழுது பயிற்சி செய்வதை நிறுத்தி விடுங்கள். பும்ரா நிச்சயம் இந்திய அணிக்கு தேவை. அவர் கட்டாயம் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.