மயங்க் யாதவ் 150 கிமீ வேகத்தில் ஏன் பந்து வீசவில்லை?.. காரணம் குறித்து ஆகாஷ் சோப்ரா விளக்கம்

0
241
Aakash

நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் 150 கிலோமீட்டர் வேகத்தில் ஏன் பந்து வீசவில்லை? என ஆகாஷ் சோப்ரா விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் லக்னோ அணிக்காக விளையாடிய மயங்க் யாதவ் வந்து வீசி அசத்தியிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று இந்திய அணிக்கு அறிமுகமானபோது இதேபோல அதிவேகமாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வீசவில்லை.

- Advertisement -

நான்கு மாத காயமும் 149 கிமீ வேகமும்

நேற்றைய போட்டியில் மயங்கி யாதவ் அதிகபட்சமாக 149.9 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார். இது கணக்குப்படி 150 கிலோமீட்டர் என்று பதிவாகும் என்றாலும் கூட, முழுமையாக 150 கிலோமீட்டர் வேகத்தில் அவர் பந்து வீசவில்லை. மேலும் தொடர்ந்து இதே அளவில் பந்து வீச அவர் முயற்சி செய்யவும் இல்லை. முதல் ஓவரிலேயே வேரியேஷனை கொண்டு வந்து மெதுவான பந்து ஒன்றையும் வீசினார்.

எனவே மயங்க் யாதவ் அதிவேகமாக பந்து வீசுவார் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதை விட, இனி அவரால் வேகமாக வீச முடியுமா முடியாதா? என்கின்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து தற்பொழுது ஆகாஷ் சோப்ரா விளக்கம் அளித்திருக்கிறார்.

- Advertisement -

வேகமாக வீசாததற்கான காரணம்

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “மயங்க் யாதவ் தன்னுடைய முதல் ஓவரை மெய்டனாக வீசினார். அவர் நான்கு மாதம் காயத்தால் பந்து வீசாமல் இருந்து நேரடியாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக அறிமுகமானதால் அவருக்கு வயிற்றில் சில பட்டாம்பூச்சிகள் பறந்து இருக்கும்”

“இருந்தபோதிலும் அவர் சிறப்பாக நேர்கோட்டில் துவங்கி அற்புதமாகவே பந்து வீச செய்தார். அவர் தன்னுடைய உடல் மீது கவனம் செலுத்தியதால் 150 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீச முயற்சி செய்யவில்லை. ஆனாலும் கூட அவர் அதிவேகமான பந்துவீச்சாளர் என்பதில் சந்தேகம் இல்லை”

இதையும் படிங்க : இந்தியா குழந்தைகளை வச்சு கூட பங்களாதேஷ் டீமை அடிக்கும்.. இது வெறும் ஐபிஎல் லெவன் தான் – பாக் பசித் அலி பேட்டி.

“அவர் நல்ல வேகத்தில் பந்துவீசி தனக்குத் தேவையான பொருட்கள் கிடைத்திருப்பதாக காட்டினார். இதை வைத்து கூடிய விரைவில் நல்ல சமையலை செய்து விட முடியும். இதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். அதேபோல் இந்திய அணி நிர்வாகமும் அவருக்கு தேவையான நேரத்தை கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -