இந்தியா குழந்தைகளை வச்சு கூட பங்களாதேஷ் டீமை அடிக்கும்.. இது வெறும் ஐபிஎல் லெவன் தான் – பாக் பசித் அலி பேட்டி.

0
932
Basit

இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக மீதம் இருக்கும் போட்டிகளில் தங்களுடைய இளம் வீரர்களான குழந்தைகளையும் களம் இறக்கட்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.

நேற்று இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 127 ரன்களை 11.5 ஓவரில் துரத்தி அதிரடியாக பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது.

- Advertisement -

பங்களாதேஷின் டூப்ளிகேட் அதிரடி

பங்களாதேஷ் வீரர்கள் ஆரம்பத்தில் பவுண்டரி சிக்ஸர்கள் என்று ஆரம்பித்தார்கள். அவர்கள் பவர் பிளேவில் விக்கெட்டை இழந்தார்கள் என்றாலும் கூட, கேப்டன் நஜ்முல் சாந்தோ மற்றும் மெகதி ஹசன் மிராஸ் போன்றவர்கள் நிலைத்து நின்று விளையாடினாலும், அவர்களின் ஸ்டிரைக் ரேட் மிக மோசமாகவே இருந்தது. அவர்களால் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து விளையாட முடியவில்லை.

மேலும் பங்களாதேஷ் அணி பேட்ஸ்மேன்களின் ஷாரட் செலக்சனும் மோசமாக இருந்தது. அவர்களுக்கு வேகமாக ரன் அடிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் மட்டும்தான் இருந்ததே தவிர அதை எப்படி அடிக்க வேண்டும் என்கின்ற எந்த திட்டமும் இல்லை. இதன் காரணமாகவே 127 ரன்களில் சுருண்டார்கள். அடுத்து வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் எல்லோருமே ஆட்டத்தை சீக்கிரம் முடிப்பதிலேயே குறியாக இருந்து முடித்து விட்டார்கள்.

- Advertisement -

இனி இந்தியா மிச்சம் இருக்கும் குழந்தைகளையும் களம் இறக்கலாம்

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “உண்மை என்னவென்றால் வங்கதேச அணி இந்தியாவிற்கு போட்டியான அணி கிடையாது. மேலும் இந்தியா இரண்டாவது டி20 போட்டியில் வென்ற பிறகு, தனது அணியில் மிச்சம் இருக்கும் குழந்தைகளையும் களம் இறக்கி விடலாம்”

“இது பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் செய்த பங்களாதேஷ் அணியா? முதல் டெஸ்டில் என்ன நடந்தது என்று பார்த்தீர்கள். இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி இடம் இரண்டே நாட்களில் தோற்றார்கள். அவர்களை மழையால் கூட காப்பாற்ற முடியவில்லை”

இதையும் படிங்க : மயங்க் யாதவ் பவுலிங்கில் செய்த மாஸ் மாற்றம்.. இனி காயம் வராது.. ஆஸி தொடருக்கும் வாய்ப்பு

“தற்போது முதல் டி20 போட்டியிலும் தோல்வி அடைந்திருக்கிறார்கள். உண்மையில் இது இந்திய அணியும் இல்லை. இது ஒரு ஐபிஎல் பிளேயிங் லெவன்தான். இந்த அணியில் பல முன்னணி நட்சத்திர வீரர்கள் விளையாடவில்லை.மேலும் வழக்கமாக விளையாடும் ரவி பிஸ்னாய் கூட நேற்று விளையாட வில்லை. ஆனால் இந்த அணியையே பங்களாதேஷ் அணியால் சமாளிக்க முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -