மற்ற டீம் மாதிரி.. சிஎஸ்கே என்ன இதை செய்ய சொல்லல.. அதனாலதான் என் ஆட்டம் மாறுச்சு – அஜிங்கியா ரகானே பேட்டி

0
821

இந்தியாவின் உள்நாட்டுத் தொடரான சையது முஸ்தாக் அலி டிராஃபி கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் அஜின்கியா ரகானே அதிரடியாக விளையாடி தனது சிறந்த பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தான் விளையாடிய விதம் குறித்து ரகானே சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடர்

இந்திய அணியைத் தாண்டி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கிரிக்கெட் வீரரான ரகானே பல அணிகளுக்காக சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது நங்கூரமாக இவர் ஒரு முனையில் நின்று 120 முதல் 130 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட மற்ற வீரர்கள் அனைவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரகானே விளையாட ஆரம்பித்த நிலையில் அவரது ஆட்டம் அதிரடியாக மாற ஆரம்பித்தது.

சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் களமிறங்கிய ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் சையது முஸ்தாக் அலி டிராபி டி20 தொடரில் விளையாடி வரும் அவர் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 170 ஸ்ட்ரைக் ரைட்டில் 432 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போதே தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ரகானே சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே இந்த வகையில் எனக்கு உதவியது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் ஐபிஎல் தொடரில் விளையாடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருந்து ஒரு தெளிவான செய்தி வந்தது. அதாவது நீங்கள் உங்கள் இயல்பான ஆட்டத்தை ஆடுங்கள். நீங்கள் ஒரு நங்கூர விளையாட்டை விளையாடுங்கள் மற்றவர்கள் உங்களை சுற்றி விளையாடுவார்கள் என ஒருபோதும் கூறியது இல்லை. மற்ற அணிகள் எனக்கு நீங்கள் ஒரு 15 முதல் 16 ஓவர்கள் வரை நிலைத்து நின்று விளையாடுங்கள். மற்றவர்கள் உங்களை சுற்றி விளையாடுவார்கள் என்று தெரிவித்திருந்தனர். அதனால்தான் நான் அப்போது 120 முதல் 130 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினேன்.

இதையும் படிங்க:ரோகித் ஹெட்டுக்கு எதிரா இந்த பிளான் பண்ணுங்க.. நியூசிலாந்து இதைத்தான் செஞ்சாங்க – ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை

ஆனால் கடந்த இரண்டு வருடங்கள் சென்னை அணிக்காக விளையாடியது எனக்கு நிறைய உதவி இருக்கிறது. நான் மிக வலுவான வீரர் இல்லை என்றாலும் பந்தின் நேரத்தைக் கணித்து என்னால் சிறப்பாக விளையாட முடியும். அதே நேரத்தில் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடும் எண்ணம் உள்ளது. எல்லா ஷாட்களும் விளையாட முயற்சிக்கிறேன். அதாவது நான் கடினமாகவோ அல்லது பெரிய ஷாட் விளையாட முயற்சிக்கவும் இல்லாமல் பந்தின் நேரத்திற்கு தகுந்தவாறு விளையாடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -